நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் காதலித்தபோது எடுத்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டத்தால் அப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தில் உள்ள ராதாநல்லூரில் வசித்து வந்தவர் சுபஸ்ரீ. இவர் கல்லூரியில்
படித்து வந்த நிலையில், திடீரென்று இடைநிறுத்தம் செய்துள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் உதய் பிரகாஷும்
சுபஸ்ரீயும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் பிரச்சனை ஏற்படவே சுபஸ்ரீ அவருடன் பேசுவதை தவிர்த்துவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உதயபிரகாஷ், சுபஸ்ரீயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டதுடன் , வீடுபுகுந்து அவரை மிரட்டியுள்ளார் என தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சுபஸ்ரீ கடந்த 24 ஆம் தேதி தீக்குளித்துள்ளார். அக்கம் பக்கட்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மயிலாடுதுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபஸ்ரீ இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply