யாழ்ப்பாணம் – பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply