கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிக்கு ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று எப்படி பரவியதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டவர்,

“ஜாஎல சுதுவெல்ல பிரதேசத்தில் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட போதைப் பொருளுக்கு அடிமையானவர்களால், இவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெலிசர கடற்படை முகாமில் கடற்படையினர் மத்தியில் ஏற்பட்ட கொரோனோ கொத்திற்கு சமமான அறிகுறிகள் இங்கும் காணப்படுகின்றது.

எனினும் கடற்படைக்கு ஏற்பட்ட கொரோனா கொத்து போன்று நீண்ட காலம் செல்வதற்கு முன்னர் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்.

இதனை சமூகத்திற்குள் பரவ விடாமல் தடுப்பதற்கே சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் இதனை இலகுவில் கட்டுப்படுத்தி விடலாம். பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை.

அத்துடன் பிரதேசங்களை முடக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படாதென” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply