உங்கள் அன்புக்குரியவர்களை அரவணைக்க முடியாத கவலையா?. அதை விட்டுவிட்டு பூங்காவில் உள்ள மரத்தை கட்டிப்பிடியுங்கள் என்று இஸ்ரேல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் மக்கள் தங்கனை தற்காத்துக் கொள்ள சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைக்கொடுக்கக் கூடாது என வலியுறத்தப்பட்டுள்ளனர்.
இதனால் தமக்கும் மிகவும் வேண்டியவர்களிடம் அன்பைக்காட்ட அவர்களை கட்டிப்பிடிக்கவோ, கைக்கொடுக்கவோ, அருகில் நின்ற பேசவோ முடியாமல் மக்கள் தடுமாறுகிறார்கள். இதனால் மன ஆழுத்தத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது.
இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர மக்கள் பூங்காவிற்குச் சென்ற அங்குள்ள மரங்களை கட்டிப்பிடித்து அன்பபை வெளிப்படுத்துங்கள், மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள் என்ற இஸ்ரேலி பூங்கா அதிகாரி ஒருவர் மக்களிடையே பிரசாரம் செய்து வருகிறார். மேலும் உலக மக்களும் இதை செய்யுங்கள் என சமூக வலைதளங்கள் மூலம் இந்த செய்தியை பரப்பி வருகிறார்.
இஸ்ரேல் டெல் அவிவ் நகரத்தில் இருந்து சுமார் 20 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் அப்போலோனியா தேசிய பூங்காவில் அதிகாரிகளின் மார்க்கெட்டில் டைரக்டராக இருக்கும் ஒரிட் ஸ்டென்பெல்டு ‘‘இந்த விரும்பத்தகாத கொரோனா வைரஸ் காலத்தில் இயற்கையான வெளி இடத்திற்குச் செல்லுங்கள், மூச்சை நான்றாக இழுத்து விடுங்கள், ஒரு மரத்தை கட்டிப்பிடித்து உங்கள் அன்பை வெளிப்படுத்தவும், அன்பைப் பெறவும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்’’ என்றார்.
அப்போலோனியா தேசிய பூங்காவில் இஸ்ரேல் மக்கள் மரங்களை கட்டிப்பிடித்து தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர்.