கொரோனாவால் குணமடைந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட மாதங்களுக்குள் இழந்து மீண்டும் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி சார்பில் கொரோனாவால் குணமடைந்த 90-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், குணமடைந்த 3 வாரங்கள்வரை மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்ச திறனுடன் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு வேகமாக குறைந்தது.

60 சதவீத நோயாளிகளுக்கு வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தபோதிலும், 17 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே 3 மாதங்கள்வரை நோய் எதிர்ப்பு சக்தி நீடித்தது.

3 மாத காலத்தில் நிறைய பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி 23 மடங்கு குறைந்துவிட்டது. சிலருக்கு முற்றிலுமாக போய்விட்டது. இப்படி குணமடைந்தவர்களுக்கு பருவநிலை மாற்றத்தின்போது, மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள், தடுப்பூசி கண்டுபிடிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

Share.
Leave A Reply