கைதடி இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானது.

இவ்விபத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றதுடன், இதன்போது இராணுவச் சிப்பாயின் கால் முறிவடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதடி பகுதியில் அமைந்துள்ள குறித்த இராணுவச் சோதனைச் சாவடி வழியாக அதிவேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது. அதனை கடமையிலிருந்த இராணுவச் சிப்பாய் மறித்துள்ளார்.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்தவர் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைதடுமாறி இராணுவச் சிப்பாய் மீது மோதியுள்ளார். இதனால் இராணுவச் சிப்பாயின் கால் முறிவடைந்துள்ளது.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன், இவ்விபத்து குறித்து விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply