மெக்ஸிக்கோவில் மலையேறுபவர்களான யுவதிகள் இருவர் கரடியொன்றுடன் சேர்ந்து செல்பி படமெடுத்துள்ளனர்.
இந்த யுவதிகள் இருவரும் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்களுக்கு பின்னால் கரடியொன்று தனது பின்னங்கால்களில் நின்றுகொணடு; நெருங்கிவந்த போது எவ்வித பயமும் இன்றி சாதாரணமாக இருந்துள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவில் செய்துள்ளார்.
தமது நண்பிகளை குறித்த கரடி நோட்டமிடுவதை யுவதிகளின் நண்பிகள் அவதானித்துகொண்டு இருந்துள்ளன.
நான்கு கால்களால் நின்றுகொண்டிருந்த அக்கரடி திடீரென முன்னிரு கால்களையும் தூக்கிக்கொண்டு பின்னங்கால்களால் நின்றுள்ளது.
அங்கிருந்தவர்கள் கரடியை திசைதிருப்ப முயன்றபோதும் அது அங்கிருந்த பெண்ணொருவரின் தலைமையை மோப்பம் பிடித்து கொண்டி இருந்துள்ளது.
அப்பெண்கள் தமது கைப்பேசியை வெளியே எடுத்தவுடன் அக்கரடி புகைப்படம் எடுத்துகொள்ள தயாராகியுள்ளது. இந்த வீடியோவை 20இலட்சத்துக்கு அதிகமானோர் சமூகவலைத்தளங்களில் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ)