இலங்கைக்கான சுவிஸ்நாட்டு தூதுவர் மற்றும் அதிகாரிகள் நேற்று கூட்டைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனை திருகோணமலையில் அமைந்திருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளர். பின்னர் அதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக இலங்கைக்கான சுவிஸ்தூதுவர், அவரது அரசியல் செயலாளர் மற்றும் அதிகாரிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடினேன். குறிப்பாக மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் சம்பந்தமாகவும் தேர்தலுக்கு பிறகு நிலைமை எவ்வாறாக அமையும் என்பது பற்றியும் அவரது கணிப்பை என்னிடம் கூறினார்.
தேர்தலுக்கு பின்னர் பல கடமைகளை நிறைவேற்றவேண்டிவரும். ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அரசியல் ரீதியாக எடுக்கப்படவேண்டிய முடிவுகள் புதிய அரசியல் சாசன திருத்தம் உட்பட பலவிடயங்கள் புதிய பாராளுமன்றம் கூடிய பின்னர் முன்னெடுக்கப்படும் என நான் அவர்களுக்கு தெரிவித்தேன். இந்த விடயங்கள் இலகுவாக இருக்காது. மாறாக கடினமாக இருக்கும். இருந்தபோதும் ஒரு அரசாங்கம், ஒருநாடு தான் செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறி அல்லது சர்வதேச சட்டத்தைமீறி, அவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறி தொடர்ந்தும் செயற்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல.
இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக தனது ஒப்பந்தங்களை வாக்குறுதிகளை மீறி செயற்பட்டுவந்திருக்கின்றது. அதற்கு முடிவு வரவேண்டும். எம்மை பொறுத்தவரையில், நாங்கள் எவரையும் பகைக்க விரும்பவில்லை. அதேநேரம் எமது மக்களது அடிப்படை உரிமைகளில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை. எமது மக்கள் சார்ப்பாக மேற்கொள்ளவேண்டிய கடமைகளை மேற்கொள்வோம். அதேபோன்று எடுக்கவேண்டிய முடிவுகளை எடுக்கவேண்டிய நேரத்தில் எடுப்போம்.