இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், இளைஞர் ஒருவரின் காற்சட்டைக்குள் பாம்பு ஒன்று புகுந்ததால், அந்த இளைஞர் சுமார் 7 மணித்தியாலங்களாக அசையாமல் ஒரே இடத்தில் நின்றுள்ளார்.

 

உத்தபிரதேசத்தின் மீர்ஸாபூர் மாவட்டத்தின் சுpகண்டர்பூர் கிராமத்தில் கடந்த புதன்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மின்கம்பங்களை நடும் தொழிலாளர்கள் சிலர் இரவு உணவின் பின்னர் இடமொன்றில் உறங்கியுள்ளனர். அவர்களில் ஒருவரான லோகேஷ் குமார் நள்ளிரவில் கண்விழித்திருந்திருந்த நிலையில் தனது ஜீன்ஸுக்குள் பாம்பு ஒன்று புகுந்திருப்பதை உணர்ந்துள்ளார்.

 

அதையடுத்து அவர் அச்சத்துடன் அங்கிருந்த தூண் ஒன்றை பிடித்துக்கொண்டு விடியும்வரை 7 மணித்தியாலங்களாக நின்றுள்ளார். பாம்புக்கு இடையூறு ஏற்படுத்தினால் அது தன்னை தீண்டிவிடும் என்ற அச்சத்தில் அவர் அசையாமல் நின்றிருந்தார்.

இந்நிலையில், மறுநாள் காலை சக தொழிலாளர்களின் உதவியுடன் பாம்பாட்டி ஒருவர் வரவழைக்கப்பட்டு, ஜீன்ஸ் காற்சட்டையை வெட்டி உள்ளே இருந்த நாகப் பாம்பு வெளியேற்றப்பட்டதுடன், இளைஞரும் காப்பற்றப்பட்டார்.

பாம்பு அகற்றப்படும் காட்சி அங்கிருந்த ஒருவரால் பதிவுசெய்யப்பட்டு, சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த நிலையில் குறித்த வீடியோ தற்போது வைரலாகிவருகின்றது.

Share.
Leave A Reply