இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தைக் கடந்துள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.
இந்த வைரஸ் காரணமாக நேற்று ஒரேநாளில் 70 ஆயிரத்து 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 30 இலட்சத்து 43 ஆயிரத்து 436 ஆக பதிவாகியுள்ளது.
இதேநேரம் இந்த வைரஸ் காரணமாக நேற்று ஒரேநாளில் 918 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 846 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, இந்த தொற்றுக்கு உள்ளான 22 இலட்சத்து 79 ஆயிரத்து 900 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இந்த தொற்றுக்கு உள்ளான 7 இலட்சத்து 6 ஆயிரத்து 690 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், அவர்களில் 8 ஆயிரத்து 944 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் இந்த வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக தொடர்ந்தும் மகராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு, டெல்லி ஆகியன உள்ளமை குறிப்பிடத்தக்கது.