யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் விசர் நாய் கடிக்கு இலக்கான இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.

மன்னார் தாழ்வுபாட்டை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான ஜேபநேசன் ரிறாடோ கொன்சலியா டயஸ் (வயது 39) என்பவருக்கும் அவருடைய மகனுக்கும் கடந்த மாதம் 13 ஆம் திகதி நாய் கடித்துள்ளது. மகனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற குறித்த பெண் மகனுக்கு ஊசி ஏற்றிவிட்டு தனக்கு ஊசி ஏற்றாமல் வந்துள்ளார் .

இந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி நெஞ்சு வலித்து மூச்சு அடைப்பதாக தெரிவித்து மன்னார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

அடுத்து வட்டுக்கோட்டை சங்கரத்தையை சேர்ந்த

தவச்செல்வம் தர்சன் (வயது 15 ) என்ற மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளார். ஆனால் வைத்தியசாலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நெஞ்சு வலிப்பதாக தெரிவித்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தண்ணீரை பார்த்து இரவு முழுவதும் பயந்தபடி இருந்த குறித்த மாணவன் நேற்று அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்துள்ளார்

இந்த மரண விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்

Share.
Leave A Reply