இலங்கையில் 19- 25 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்கள் அதிகம் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.நாடுபூராகவும் உள்ள தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு பிரிவின் கிளினிக்குகளில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளுக்கமையவே, இந்த விடயம் குறித்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் இதுவரைன காலப்பகுதிக்குள் 3,600 பேர் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ள போதிலும் இதுவரை ,தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு பிரிவில் இதுவரை 2,000 பேர், பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 1600 பேர் தமக்கு எயிட்ஸ் தொற்று இருப்பதாக அறியாமல் ஏனையோருடன் பழகி வருவதாகவும் தெரிவித்தார்.
Post Views: 31