கணவனின் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து கள்ளக்காதலனுடன் ஆஸ்திரேலியாவிற்கு ஜாலியாக டூர்போய் இருக்கிறார். மனைவி-

ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக ஆஸ்திரேலியாவில் இருந்து அவர்களால் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து, பல மாதத்திற்கு பிறகு திரும்பி வந்துள்ளார்கள்.

மும்பையில் வசித்து வந்த கணவனோ மனைவியின் செயல் குறித்து புகார் அளித்த பின்னரே விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

பிலிபிட்டைச் சேர்ந்த 36வயது நபர், கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தனது கள்ளக்காதலியுடன், அவரது கணவரின் பெயரில் பாஸ்போர்ட் பெற்று ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்..

இருவரும் மார்ச் மாதத்தில் திரும்பி வரவிருந்தனர், ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தியா செல்லும் அனைத்து சர்வதேச பயணிகள் விமானங்களும் இடைநிறுத்தப்பட்டதால் அவர்கள் அங்கேயே சிக்கி கொண்டனர்.

கடந்த ஆகஸ்ட் 24 அன்று தான் வீடு திரும்பி உள்ளார்கள்.

கள்ள பாஸ்போர்ட்

அவர்கள் திரும்பி வந்த பின்னர் மும்பையில் பணிபுரியும் பெண்ணின் கணவர் ( 46 வயது), தன் பாஸ்போர்டில் தனக்கு பதிலாக கள்ளக்காதலன் சென்றதை கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து நேரடியாக காவல் நிலைத்திற்கு சென்று புகார் அளித்த அவர், தனது மனைவியுடன் கள்ள பாஸ்போர்ட் நபர் “கள்ள” உறவு வைத்திருப்பதை கூறியதுடன், கள்ள பாஸ்போர்ட் விஷயத்தையும் கூறியிருக்கிறார்.

என் மனைவி வீட்டில் இல்லை

இதை கேட்டு வாயடைத்து போன போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாணையில் அவர் கூறும் போது. “நான் கடந்த 20 ஆண்டுகளாக மும்பையில் பணிபுரிந்து வருகிறேன்.

எப்போதாவது ஒரு முறை என் மனைவியை பார்க்க வருவேன் அவர் என் மூதாதையரின் நிலத்தை கவனித்து வந்தார்.

கடந்த மே 18 அன்று நான் பிலிபித்துக்குத் திரும்பியபோது, ​​என் மனைவி வீட்டில் இல்லை. இருவரும் ஆஸ்திரேலியா சென்றிருப்பதை சந்தீப்பின் குடும்பத்தினர் கூறிய பிறகே அறிந்தேன்.

ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல சந்தீப் எனது பெயரில் பாஸ்போர்ட்டைப் பெற்றதற்கான போலி ஆவணங்கள் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க, ஆகஸ்ட் 24 ஆம் தேதி பரேலியை தளமாகக் கொண்ட பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட்டுக்கு வேண்டுமென்றே விண்ணப்பித்தேன்.

எனது சந்தேகத்தை பாஸ்போர்ட் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். என் பெயரில் ஒரு பாஸ்போர்ட் ஏற்கனவே பிப்ரவரி 2, 2019 அன்று வழங்கப்பட்டதாக என்னிடம் கூறினார்கள். எனவே இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பல மட்டங்களில் அடையாள சரிபார்ப்பு இருந்தபோதிலும், புகார் கூறிய நபரின் பெயரில் பாஸ்போர்ட் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக, நாபா ஜெயில் பிரேக் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் குர்ஜீத் சிங் லடாவும் பிலிபிட்டில் வசிக்கும் வேறு ஒரு நபரின் பெயரில் போலியாக பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.
போலி பாஸ்போர்ட்டில் கனடாவுக்கு பறக்கவிருந்த நிலையில் 2017ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

Share.
Leave A Reply