• ஆம். தமிழ் தான் முதல்மொழி
  • மகாவம்சத்தில் சொல்லப்படுபவை நிரூபிக்கக்கூடியவை அல்ல.
  • விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்.
  • முள்ளிவாய்க்காலில் அப்பாவி மக்களே கொல்லப்பட்டனர்.
  • பிரபாகரனுக்கு மக்களை பலிக்கடாக்களாக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை.

இவ்வாறு பல்வேறு துணிச்சலான பதில்களை ‘டெரன’ செய்தியாளருடனான நேர்காணலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் அளித்துள்ளார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:

ஊடகவியாளர் : பாராளுமன்றத்தில் கன்னி உரையிலேயே உங்களுக்கு என்ன நடந்தது?
விக்னேஸ்வரன் : எம்.பிக்கள் அதனை கேட்டு குழப்பமடைவார்கள் என்று நான் நினைக்கவில்லை. தெளிவொன்று இருந்தமையினாலேயே நான் அதனை கூறினேன்.

ஊடகவியலாளர் : தமிழ் மொழியை இலங்கையின் முதல் மொழியாக தெரிவித்துள்ளீர்கள்.
விக்னேஸ்வரன் : அதுதான் உண்மை.

ஊடகவியலாளர் : அதற்கான அடிப்படை ஆதாரம் என்ன?
விக்னேஸ்வரன் : கலாநிதி பத்மநாதனை சந்தித்த போது இப்போது வேண்டியளவுக்கு சாட்சிகள் உள்ளன. 3000 வருடங்களுக்கும் மேலான காலங்கள் தமிழ் மொழி இலங்கையில் பயன்படுத்தப்பட்டமைக்கு சாட்சிகள் உள்ளதாக தெரிவித்திருந்தார். இதன்படியே நான் அவ்வாறு கூறினேன்.

ஊடகவியலாளர் : இலங்கையில் நாகரிகம் அல்லது குடியேற்றங்கள் விஜயனின் வருகையுடனேயே உருவாகின்றது.

விக்னேஸ்வரன் : அது மகா வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் வரலாற்றில் நிரூபிக்கக் கூடியவை என்று எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.

ஊடகவியலாளர் : நீங்கள் வடக்கின் முதலமைச்சராக இருந்த போது வடக்கு மக்களுக்காக என்ன செய்துள்ளீர்கள்.

விக்னேஸ்வரன் : வேண்டியளவுக்கு செய்துள்ளோம். உங்களுக்கு பத்திரிகைகளில் இருக்கும் விடயங்களே உங்களுக்கு தெரியும்.

ஊடகவியலாளர் : கடந்த 5 வருடங்களிலும் வடக்கு மாகாண சபைக்காக ஒதுக்கப்பட்டிருந்த பெருமளவு நிதி மீண்டும் திறைச்சேரிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை ஏன் மக்களுக்காக பயன்படுத்தவில்லை.

விக்னேஸ்வரன் : அவற்றை அரசாங்க முகவர்களின் ஊடாகவே செய்ய வேண்டும். அதனை அவர்கள் செய்வதில்லை. அந்த அரசாங்க முகவர்களே நிதியை திருப்பி அனுப்பியுள்ளனர்.

ஊடகவியலாளர் : விடுதலைப் புலிகள் அமைப்பை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்

விக்னேஸ்வரன் : நீங்கள் பார்ப்பதை போன்று பயங்கரவாதிகள் என்று யாரையும் கூறுவதில்லை. அவர்கள் தமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளால் யுத்தத்திற்கு இறங்கினர். அதற்கு காரணம் இலங்கை அரசாங்கமே ஆகும்.

ஊடகவியலாளர் : உலக நாடுகள் இதனை பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்கையில் நீங்கள் இதனை பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்வதில்லை.

விக்னேஸ்வரன் : அரசாங்கம் செய்யும் தவறுகளை கூடி மறைத்து, அதனை கேட்பவரை பயங்கரவாதி என்று கூறுகின்றனர். அது எப்படி சரியாகும்.

ஊடகவியலாளர் : ஆனால் அவர்கள் மனித கொலைகளை செய்தமை மற்றும் அப்பாவிகளை கொலை செய்தமையை ஏற்றுக்கொள்ள முடியுமா?

விக்னேஸ்வரன் : இவர்கள் வடக்கில் அப்பாவிகளை கொலை செய்ததை சரியென கூறலாமா?

ஊடகவியலாளர் : இராணுவத்தினரால் விடுதலைப் புலி உறுப்பினர்களை தவிர அப்பாவி மக்களை கொலை செய்தார்களா?

விக்னேஸ்வரன் : 2009 மே 18ஆம் திகதி ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் அப்பாவி மக்களே. அவர்கள் அப்படியே முள்ளிவாய்க்காலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் : அவர்களை அவ்வாறு அழைத்து வந்தது பிரபாகரனா? இராணுவமா? பிரபாகரன் அவர்களை பலிக்கடாவாக பயன்படுத்தியிருக்காலம்

விக்னேஸ்வரன் : அவருக்கு அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லையே.

ஊடகவியலாளர் : நீங்கள் கூறுவதை பார்த்தால் பிரபாகரன் ஒரு குழந்தை அவருக்கு ஒன்றும் தெரியாது மக்களை பாதுகாக்க அங்கு சென்றிருந்தார். என்றுதான் எங்களுக்கு தோன்றுகின்றது.

விக்னேஸ்வரன் : இல்லை , இல்லை 30 வருடங்களாக அரசாங்கத்திற்கு எதிராக போராடியவரை குழந்தையாக நான் கூறுவதில்லை.

ஊடகவியலாளர் : நீங்கள் முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதிகளின் மயானத்தில் சத்தியப்பிரமானம் செய்தீர்கள்.

விக்னேஸ்வரன் : அந்த இடத்திற்கு சென்று அந்த மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற கடமை எங்களுக்கு உள்ளது.

ஊடகவியலாளர் : நாட்டின் சட்டத்திற்கமைய பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஏதேனும் வகையில் ஒத்துழைப்பு வழங்கும் எதனையும் செய்ய முடியாது.

விக்னேஸ்வரன் : எப்படி என்று சொல்லுங்கள் பார்ப்போம். இறந்தவர்கள் பயங்கரவாதிகள் என்று யார் சொன்னது. இறந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று சிங்கத்தில் எழுதப்பட்டுள்ளதா?

ஊடகவியலாளர் : நீங்கள் வடக்கில் புத்தர் சிலைகளை வைக்கக் கூடாது என்று கூறியுள்ளீர்களே.

விக்னேஸ்வரன் : பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் இல்லாத இடங்களில் இவற்றை வைக்க என்ன காரணம் என்றே நான் கூறியிருந்தேன்.

ஊடகவியலாளர் : அதனூடாக உங்களுக்கு ஏதேனும் குறைகள் ஏற்படுகின்றனவா?
விக்னேஸ்வரன் : ஆம் குறைகள் ஏற்படுகின்றன. சிங்கள மக்களை அவ்விடத்திற்கு கொண்டு வர செய்யப்படுகின்றன.

ஊடகவியலாளர் : வாழ்வதற்காக வடக்கிற்கு சிங்கள மக்கள் வருவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?

விக்னேஸ்வரன் : அரசாங்கத்தினால் அவ்விடங்களில் பலவந்தமாக குடியமர்த்த முயற்சிக்கின்றனர்.

ஊடகவியலாளர் : வடக்கில் சிங்கள குடியேற்றங்களை அமைப்பது தவறா?
விக்னேஸ்வரன் : இராணுவத்தினர் இருப்பதால்தான் இவர்கள் அங்கு வருகின்றனர்.

ஊடகவியலாளர் : உங்களின் இரண்டு பிள்ளைகளும் சிங்கள பெண்களையே திருமணம் முடித்துள்ளனர். உங்களின் பிள்ளைகளை கொழும்பு பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். இல்லாவிட்டால் வெளிநாட்டில் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புகின்றீர்கள்.

விக்னேஸ்வரன் : நீங்கள் கூறும் விடயங்கள் நான் அரசியலுக்கு வர முன்னர் நடந்தவையே. அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால் அவர்களுக்கு இருக்கும் பிரச்சினையை நாங்கள் உங்களுக்கு கூறும் போது அது உங்களுக்கு இனவாதமாக தெரிகின்றது.

ஊடகவியலாளர் : நீங்கள் அவ்வாறுதானே கூறுகின்றீர்கள்.

விக்னேஸ்வரன் : அப்படியென்றால், என்னை வாயை மூடிக் கொண்டு இருக்கவா சொல்கின்றீர்கள். நான் என்ன செய்ய. கூறுவதற்கு வேறு முறைகள் இருந்தால் சொல்லுங்கள்.

Share.
Leave A Reply