கண்டி, பல்லேகல பகுதியில் இன்று மீண்டும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

அதன்படி காலை 7.06 மணிக்கு இந்த நில அதிர்வானது பதிவாகியுள்ளதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இது உண்மையில் இயற்கையான நில நடுக்கமா அல்லது வேறு காரணத்தினால் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதா என்பது இன்னும் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, கண்டியின் சில பகுதிகளிலும், முக்கியமாக ஹரகாமா மற்றும் திஹானவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறிய நில அதிர்வு பதிவுசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply