ரொறன்ரோ- வூட்பைன் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில், இலங்கையர் ஒருவர் உயிரிழந்ததோடு 6பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது படகில் இருந்த 7 பேருமே தமிழர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

படகு விபத்துக்கு காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க பொலிஸார் இன்னும் முயன்று வருகின்றனர்.

ஆனால் படகு அதிவேகமாக 90 மீட்டர் தொலைவில் உள்ள பாறைகளை நோக்கி அதிவேகமாக பயணித்ததாகக் காணொளியொன்றில் தெரியவந்துள்ளது.

நள்ளிரவு 12:35 மணியளவில் விபத்து நடப்பதற்கு சற்று முன்னர் இந்த காணொளி எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.


விபத்துக்குள்ளான கப்பல் 20 அடி பவுரைடர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கியவர் மருத்துவமனையில் இறந்தார்.

மேலும் மூன்று பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அந்த மூவரில், இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

மேலும், மூன்று பேர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றனர்.

Share.
Leave A Reply