யாழ்ப்பாணம், சங்குபிட்டியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.சாவகச்சேரி – தனங்களப்பு – அறுகுவெளி – ஐயனார்கோவிலடியில் இடம்பெற்ற நேற்றைய விபத்தில் உயிரிழந்தவர் 4 பிள்ளைகளின் தாயான, 47 வயதுடைய முன்னாள் பெண் போராளி மீரா என அடையாளங்காணப்பட்டுள்ளார்.
போரில் ஒரு காலை இழந்த நிலையில் வாழ்க்கையில் போராடி வாழ்ந்த பெண், மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.