பிரான்ஸில் Marseille நகரின் 14 ஆம் வட்டாரத்தில் கடந்த 08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொட்டியில் இருந்து கைக்குழந்தையின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

கழிவு அகற்றும் ஊழியர் ஒருவர் குப்பை தொட்டி ஒன்றில் இருந்து புதிதாக பிறந்த கைக்குழந்தை ஒன்றின் சடலத்தை கண்டுபிடித்துள்ளார்.

உடனடியாக அவர் காவல்துறையினரை அழைத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், அக்குப்பைத்தொட்டிக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் 24 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்தனர்.

அப்பெண் சில மணிநேரங்களுக்கு முன்னர் தான் அக்குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் அப்பெண்ணுடன் அவரது பாட்டியையும் கைது செய்தனர்.

விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Share.
Leave A Reply