51 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 97,894 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 51,18,254-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,132 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்திருக்கின்றன.
இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்புகள் 83,198-ஆக அதிகரித்திருக்கின்றன.
இந்தியாவில் இதுவரை 40,25,080 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்கள். 10,09,976 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

