தரம் 1 இல் கல்வி கற்கும் நான்கு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் நேற்று (25) பாடசாலைக்கு சென்று, வகுப்பறைக்குள் வைத்தே ஆசிரியரை நையப்புடைத்து, வகுப்பறைக்குள் கட்டி வைத்து, பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ரம்மல பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

தரம் 1 இல் கல்வி கற்கும் மாணவியொருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தார். அவர் அதை தனது வீட்டில் தெரிவித்துள்ளா்.

இதையடுத்து ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் அந்த வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் சிலர் கூட்டாக பாடசாலைக்கு நேற்று சென்றனர். ஆசிரியரிடம் நடந்த விவகாரத்தை கேட்டதுடன், தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவரை கயிற்றினால் கதிரையில் கட்டி வைத்து நையப்புடைத்ததில் காயங்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலைமையை அடைந்தார்.

அவரது கையடக்க தொலைபேசியை பறித்து சோதனையிட்டதில், மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து வலஸ்முல்ல பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிசார் அந்த ஆசிரியரை கைது செய்து வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அவரால் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட 4 மாணவிகள் அடையாளம் காணப்பட்டு, வைத்திய பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அவர் அங்குனுகொலபெலெசவை சேர்ந்தவர்.

நேற்றைய தினமே வலஸ்முல்ல நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Share.
Leave A Reply