கொரோனா வைரஸ் தொற்று குழந்தைகளை அதிகமாக பாதிக்காமல் இருப்பதற்கு தாய்ப்பால் உதவக்கூடும், என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்படாவிட்டாலும் கூட, தாயின் பால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்க்கிருமிகளின் தொற்று மற்றும் தாக்கத்தை தடுப்பதாகக் சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததுள்ளனர்.
மேலும் ஆடு, மாடுகள் போன்ற பிற விலங்குகளின் பாலினை விடவும் தாய்பால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
பெய்ஜிங் வேதியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, தாய்பால் தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரையை ஆதரிப்பதாகக் அறிவித்துள்ளது.
இவர்கள் மேற்கொண்ட ஆய்வில்,
2017 ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தாய்ப்பால் – தொற்றுநோய்க்கு முன் – உயிரணுக்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அவர்கள் பகுப்பாய்வு செய்தனர்.
ஆரோக்கியமான செல்கள் மனித தாய்ப்பாலில் கலந்தனர். பின்னர் செல்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாக்கப்பட்டன.
இதன் போது பெரும்பாலான வைரஸ்கள் கலங்களுடன் பிணைக்கவோ அல்லது நுழையவோ இல்லை. மீறி கலங்களுக்குள் நுழைந்த வைரஸால் அதன் நகல்களை உருவாக்கவும் முடியவில்லை.
இதன் மூலம், நோரோ வைரஸ் மற்றும் பக்டீரியா போன்ற பிற வைரஸ்களைப் போலவே தாய்ப்பால் கொரோனா வைரஸைத் தடுக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னதாக இதே ஆராய்ச்சி குழு மேற்கொண்ட ஆய்வில், தாய்பால் விலங்குகளின் சிறுநீரக உயிரணுக்களில் கொரோனா வைரஸ் தொற்றுவதை தடுப்பதாக கண்டறிந்திருந்தனர். லாக்டோஃபெரின் போன்ற பிற புரதங்களை விட, அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட பால் புரதம் வைரஸை செயலிழக்கச் செய்வதாக அவர்கள் தீர்மானித்தனர்.
பசுக்கள் மற்றும் ஆடுகள் உள்ளிட்ட விலங்குகளின் பால் பரிசோதிக்கப்பட்டபோது விலங்குகளிடமிருந்து வரும் பால் மனித பாலின் கிட்டத்தட்ட 100 சதவீதத்துடன் ஒப்பிடும்போது வைரஸை தடுக்கும் ஆற்றல் சுமார் 70 சதவீதம் அடக்கியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.