யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் மகன் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதால் படுகாயம் அடைந்த தந்தை உயிரிழந்துள்ளார்.
இன்று (03) அதிகாலை குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த தந்தை சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருந்தபோதிலும் சிகிச்சை பலன்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.