கல்கந்த தனிமைப்படுத்தல் முகாமில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்மைக்கு கொரேனா வைரஸ் காரணமா என கம்பஹா மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

யக்கலவை சேர்ந்த 64 வயது பெண்ணின் மரணம் தொடர்பிலேயே மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என கொவிட் 19 தடுப்பு தேசிய மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என எக்கனமி நெக்ஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

பிரதேச பரிசோதனை இடம்பெறுகின்றது இது தொடர்பில் ஏனைய சோதனைகள் இடம்பெறுகின்றது என கேர்ணல் விஜித ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் மகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இவரும் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகப்படுவதாக அவர் விஜித ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார் என எக்கனமி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று இரத்தினபுரி கண்டி முல்லேரியாவை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply