இலங்கையில் நேற்றைய தினம் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மினுவங்கொடை கொத்தணியில் நேற்றைய தினம் 121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உதியானது.
அவர்களில் தனிமைப்படுத்தலில் இருந்த 87 பேருக்கும் தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புடைய 34 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் ஓமானில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதற்கமைய மினுவங்கொடை கொத்தணியில் இதுவரையில் ஆயிரத்து 307 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தொற்று உறுதியானவர்களில் மூவாயிரத்து 307 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். அத்துடன் தொற்று உறுதியான ஆயிரத்து 432 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இந்த வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.