இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சிறு பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையிலேயே, மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு கணவன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தலம்மெஹெர – பன்னல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவன் தலைமறைவாகியுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.