அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்புக்கு சீன வங்கி கணக்கு ஒன்று இருப்பதாகவும் சீனாவில் வர்த்தகத் திட்டங்களைத் தொடர அவர் பல வருடங்களை செலவிட்டதாகவும் நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த வங்கிக் கணக்கை ட்ரம்ப் இன்டர்நெஷனல் ஹொட்டேல்ஸ் மெனேஜ்மென்ட் கட்டுப்படுத்துவதுடன் 2013க்கும் 2015க்கும் இடையில் உள்ளூர் வரி செலத்தப்பட்டுள்ளது.
‘ஆசியாவில் ஹொட்டேல் ஒப்பந்தங்ளுக்கான சாத்தியக்கூறுகளை ஆராய’ அந்தக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டதாக ட்ரம்பின் பேச்சாளர் மூலம் தெரியவந்துள்ளது.
சீனாவில் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தம் செய்வதை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போரையும் அவர் தூண்டினார்.
ட்ரம்பின் வரி பதிவு விபரங்களைப் பெற்ற பின்னரே இந்த கணக்கை நியூ யோர்க் டைம்ஸ் வெளிப்படுத்தியது. அந்தக் கணக்கில் தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் நிதி விபரங்கள் அடங்குகின்றன.
இந்தப் பத்திரிகையின் முன்னைய செய்திகளில் அவர் ஜனாதிபதி ஆனபோது 2016இலும் 2017இலும் 750 டொலர் வரி செலுத்தியமை குறிப்பிடப்பட்டிருந்தது.
சீன வங்கிக் கணக்கு 188,561 டொலர்களை உள்ளூர் வரியாக செலுத்தியுள்ளது.
நியூ யோர்க் டைம்சின் செய்தி வெறும் ஊகம் என ட்ரம்ப் நிறுவனத்தின் சட்டத்தரணிகளில் ஒருவராக அலன் கார்ட்டென் தெரிவித்தார்.
அத்துடன் அப் பத்திரிகை தவறான அனுமானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூர் வரிகளை செலுத்துவதற்காக அமெரிக்காவில் அலுவலங்களைக் கொண்டுள்ள சீன வங்கியில் ட்ரம்ப் இன்டர்நெஷனல் ஹொட்டேல்ஸ் மெனேஜ்மன்ட் திறந்ததாக பத்திரிகைக்கு அவர் தெரிவித்தார்.
‘கொடுக்கல்வாங்கல்கள், பரிவர்தனைகள் அல்லது வேறு வர்த்தக நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. அத்துடன் 2015இலிருந்து அலுவலகம் செயற்படாமல் உள்ளது’ என கார்ட்டென் தெரிவித்தார்.
‘வங்கி கணக்கு தொடர்ந்து இருந்தாலும் வேறு எந்தக் காரணத்துக்காக அது பயன்படுத்தப்படவில்லை’ என நியூ யோர்க் டைம்ஸுக்கு அவர் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதிக்கு அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு வர்த்தகங்கள் இருக்கின்றன. அதில் ஸ்கொட்லாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள கோல்வ் அரங்குகளும் ஐந்து நட்சத்திர சொகுசு ஹொட்டேல்களும் அடங்குகின்றன.
சீனா, பிரித்தானியா, அயர்லாந்து ஆகிய நாடுகளில் வங்கி கணக்குகளை வைத்திருப்பதாக நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.