ஒரே பாலினத்தவர்கள் இணைந்து குடும்பமாக வாழும் வகையில் அதை அங்கீகரிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் ஒரே பாலினத்தவர் ஒன்றாக வாழ்வதற்கு ஒப்புதல் அளித்த முதல் போப்பாண்டவர் என்ற பெயரையும் பிரான்சிஸ் பெற்றுள்ளார்.
புதன்கிழமை எவ்ஜெனி அஃபினீவ்ஸ் இயக்கிய பிரான்செஸ்கோ என்ற ஒரு ஆவணப்படம் ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த ஆவணப்படத்திலேயே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒரே குடும்பமாக இருக்க உரிமை உள்ளது. அவர்கள் எல்லாம் கடவுளின் குழந்தைகள். அவர்களை யாரும் வெளியேற்ற கூடாது.
இதுகுறித்து யாரும் வருத்தப்படக் கூடாது. ஒரே பாலினத்தவர்களை அங்கீகரிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அதற்காக நான் போராடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.