சீனாவின் சிஞ்சியாங்கின் வட மேற்கு பிராந்திய நகரமான காஷ்கரில் 137 புதிய அறிகுறியற்ற கொரோனா தொற்றாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளனர்.
சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் 10 நாட்களின் பின்னர் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா தெற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
ஞாயிற்றுக்கிழமை காஷ்கரில் கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா தொற்றாளர்களும் ஒரு ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களும், அவர்களுடன் தொடர்புகளை கொண்டவர்களும் ஆவர்.
இந் நிலையில் நாட்டின் வடமேற்குப் பகுதியில் புதிய கொரோனா வைரஸ் வெடிப்பைத் தடுக்க சீன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி சின்ஜியாங் மாகாணத்தின் காஷ்கர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 4.75 மில்லியன் மக்களை உள்ளடக்கிய சனிக்கிழமை மாலை வெகுஜன பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காஷ்கரில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன, மேலும் கொரோனா வைரஸுக்கு எதிர்மறையான சோதனை அறிக்கை இல்லாத குடியிருப்பாளர்களுக்கு நகரத்தை விட்டு வெளியேற அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் மொத்தமாக 91,151 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 4,739 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.