இன்றைய தினம் மேலும் இரண்டு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19, மற்றும் 75 வயதான இருவர் உயிரிழந்துள்ளார்கள்.
அதன் படி இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று இதுவரை 3 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, கொரோனா தொற்றால் உயிரிழந்த 19 வயதுடை நபர் வாழைத்தோட்டத்தைச் சேர்ந்தவரெனவும் 75 வயதான நபர் கொம்பனித்தெரு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.