அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றது. நவம்பர் 3ம் திகதி அங்கு தேர்தல். ஜனாநாயக் கட்சியும் குடியாரசுக் கட்சியும் அங்கு மாறி மாறி அதிகாரித்தில் இருந்து வருகின்றது.

வரலாற்றில் ஒரு முறை ஜோர்ஜ் வொசிங்டன் மட்டும் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றார். அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தல் பற்றிய வரலாற்றுச் சுருக்கம் அப்படி இருக்க.

ட்ரம்ப் அமெரிக்க வரலாற்றில் ஒரு வித்தியாசமான பாத்திரம் அவரைக் கோமளி என்று அழைப்பதா வம்பன் என்று அழைப்பதா என்று எமக்குத் தெரியாது.

என்றாலும் முழு உலகமுமே இந்த மனிதனை வித்தியாசமாகத்தான் பார்க்கின்றது. கொரோ தொற்றை தடுக்க கைகளுக்கு ஸ்பிரே பண்ணுகின்ற ஸ்பீரிட்டை கொரோனா தடுப்பூசியாகக் கொடுக்கலாமே என்றவரும் இவர்தான்.

தேர்தலில் நான் தோற்றுப் போனாலும் பதவி விலக மாட்டேன் என்றார். சில தினங்களுக்குப் பின்னர் தோற்றுப் போனால் அமெரிக்காவில் இருந்தே ஓடிவிடுவேன் என்றும் சொல்லி இருக்கின்றார். இதனால் அவரது கதையை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அவருக்கு பக்க துனையாக இருந்த பல அதிகாரிகள் இந்தப் பைத்தியத்துடன் வேலை பார்க்க முடியாது என்று ஓடிப்போய் விட்டார்கள். அப்படிப்பட்ட ஒருவரது முக்கிய கையாலான மைக் பம்பியோ என்பவர்தான் இந்தியா, இலங்கை, மாலைதீவு, இந்தோனேசிய என்ற பயணத்தில் இங்கு வந்து போய் இருக்கின்றார்.

அமெரிக்காவில் ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் அதிகாரத்தில் இருப்பவர்தான் இந்தப் பொம்பியோ. மேற்சொன்ன ட்ரம்பின் பலயீனங்கள் ஒருபக்கம்.

ஆனால் ஒரு நாட்டில் செல்வாக்கான மனிதனாக வருகின்ற இந்தப் பொம்பியோவின் வருகையை சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது.

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இலங்கைக்கும் அமெரிக்கபவுக்கும் மிடையில் சோபா, எம்சீசீ போன்ற ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் எண்ணம் இருந்தது.

அப்போதய பிரதமர் ரணில் மேற்கத்திய நாடுகளுக்கு மிகவும் நம்பிக்கைக்குறியவராக இருந்தார். ஆனால் நல்லாட்சியில் இருந்த சுதந்திரக் கட்சி இதற்கு ஒத்துழைக்கவில்லை.

அதே நேரம் அப்போது எதிரானியில் இருந்த இன்றைய ஆட்சியாளர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். ஜேவிபியும் தனது கடும் எதிர்பைக் காட்டியது.

நல்லாட்சிகாரர்கள் அந்த உடன்பாட்டில் கையொப்பமிடுவதைத் தவிர்த்துக் கொண்டனர். ஆனால் அமெரிக்க தற்போது இலங்கைக்கு இந்த ஒப்பந்த விவகாரத்தில் கடும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

அன்று இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இன்று ஊமைகளாக இருக்கின்றனர். எனவே ராஜபக்ஸாக்கள் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டுப் போட்டு விட்டார்களோ என்று யோசிக்க வேண்டி இருக்கின்றது.

ஜேவிபி மைக் பொம்பியோவின் வருகைக்கு எதிராக அமெரிக்கத் தூதுவராலயம் முன் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தி இருக்கின்றது.

சீனா தூதுவர் இலங்கை விவகாரத்தில் அமெரிக்க தொந்தரவு கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றது.

அதே நேரம் சீனாவை சீண்டுகின்ற வகையில் அமெரிக்கா பிராந்தியத்தில் சில காரியங்களை இப்போது செய்து வருகின்றது. அமெரிக்கா இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்துப் போட்டிருக்கின்றது.

இது பிராந்தியத்தில் மற்றுமல்ல சர்வதேச அளவிலும் சமநிலையை மாற்றி அமைக்கக் கூடிய ஒரு காரியம்.

இந்தியா உலகில் நான்காவது பெரிய இராணுவ வல்லமையைக் கொண்ட நாடு அது அமெரிக்காவுடன் நெருங்குகின்றது என்றால் நிச்சயமாக அதனை சீனா ஒரு போதும் விரும்ப மாட்டாது.

இந்தியா சீனா எல்லையில் கொதிநிலை இருக்கின்ற இந்த நேரத்தில் இந்தியாவுடன் மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ உடன்பாடு சர்வதேசத்தின் கவனத்தை ஈக்கக் கூடி ஒன்று.

அதே போன்று இப்போது இலங்கை சீனாவுக்கு மிகவும் நெருக்கமான ஒரு நாடு. இலங்கை ஜனாதிபதி ஜீ.ஆர். இலங்கை விரைவில் சீனாபோல் வளர்ச்சியடையும் என்றும் கூறி இருந்தார்.

அமெரிக்க இலங்கைக்குள் தலையீடு செய்வது சீனாவுக்குப் பெரிய வலியைக் கொடுக்கும். எனவேதான் சீனாத் தூதுவர் பொம்பியோ வருகைக்கு அளவோடு நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கின்றார்.

இதற்கிடையில் கொரோனாவுக்கு மத்தியில் சீனா தனது பொருளாதாரத்தை சென்ன படி பாதுகாத்து வருகின்றது.

ஆனால் தற்போது சீனாவின் பொருளாதராத்துடன் ஒப்பிடும் போது அமெரிக்க பலயீனமாகவே இருந்து வருகின்றது. எனவே இலங்கை போன்ற நாடுகளுக்கு சீனா அள்ளிக் கொடுப்பது போல் அமெரிக்காவால் கொடுக்க முடியாது.

அவர்கள் அளந்துதான் கொடுப்பார்கள். எனவே அமெரிக்காவுக்கும் நெருக்கமாக இருந்து சீனாவுடனும் நட்பைப் பேனுவது என்பது இலங்கைக்கு சிரமமான காரியம்.

இதே நேரம் அமெரிக்க ராஜபக்ஸாக்களுடன் மோதிக் கொண்டு செல்வதை விட நெருக்கமாக இருந்துதான் காரியம் பார்க்க வேண்டும் என்று அமெரிக்கா நிருவாகத்துக்கு ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஈஸ்டர் தாக்குதலின் போது இலங்கைக்கு வருவதாக சொன்ன இந்தப் மைக் பொம்பியே இங்குவராமல் இந்தியா வரை வந்து விட்டுத் திரும்பிவிட்டார்.

இதற்கு என்ன காரணம் என்று இதுவரை சொல்லப்படவில்லை. அவசரமாக வந்தவர் இப்படி ஏன் திரும்பிப் போனார் என்பது இன்றுவரை புதிராக இருக்கின்றது.

கொழும்பில் கருத்துத் தெரிவித்த பொம்பியோ நாங்கள் உங்கள் இறையான்மையை மதிக்கின்றோம். உங்களுக்கு நல்லதைச் செய்ய விரும்புகின்றோம்.

அதே நேரம் சீனா உங்களை வஞ்சிக்கின்றது அவர்கள் உங்களுடன் மோசமான உடன் படிக்கைகளைச் செயது கொண்டு உங்களை ஏமாற்றுகின்றார்கள்.

அவர்கள் உங்களுக்கு சட்டமின்மையைத் தான் தர முயல்கின்றார்கள். அவர்கள் தன்னலத்துக்காகத்தான் உங்களைப் பாவிக்கின்றார்கள்.

என்று மைக் பொம்பியோ ஊடகச் சந்திப்பில் சீனாவைச் சாடி இருக்கின்றார். எனவே சீனாவுக்கு எதிரான கருத்துக்களை அவர் இங்கு விதைக்க முனைவதுடன் சீனாவை ஒரு ஆபத்தான நண்பன் என்றுதான் பம்பியோ இலங்கையை எச்சரிக்க முனைந்திருக்கின்றார் என்பது எமது கருத்து.

1840 களில் பிரித்தானிய மலை நாட்டிலிருந்த பொதுக் காணிகளைத் தன்வசப்படுத்திக் கொண்டு பின்னர் தமது நாட்டவர்களுக்குக் கொடுத்து அபிவிருத்தி செய்தது.

அவைதான் பின்னர் பெருந் தோட்ட்டஙகளாக மாற்றி அமைக்கப்பட்;டது. அது போன்ற ஒரு நிலைதான் எம்சிசி உடன்படிக்கையில் நடக்கப் போகின்றது.

இங்குள்ள ஒரு இலட்சத்தி இருபதாயிரம் ஏக்கர் நிலதை அமெரிக்க தன்வசப்படுத்திக் கொள்ள முனைகின்றது.

நவீன தொழிநுடப்பங்களை உபயோகித்து இலங்கையிலுள்ள நிலங்களைக் கைப்பற்றும் முயற்ச்சிதான் இதன மூலம் நடக்கின்றது.

இலங்கையில் உள்ள நிலங்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை இதற்காகத்தான நாம் அமெரிக்காவுடன் உடபடிக்கையொன்றை செய்த கொள்ள முனைகின்றோம் என்று காரணம் சொல்லப்படுகின்றது.

இதற்கு டிஜிடல் முறையில் கணிகளை அளவீடு செய்யவதற்கு அமெரிக்கா நமக்கு உதவ இருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது.

ஆனால் தனது நலன்கள் இல்லாமல் இது விடயத்தில் இலங்கைக்கு அமெரிக்க வலிந்து வந்து உதவ முனைவதும் இந்த உடன்பாட்டில் கையெழுத்துப் போடுமாரு அழுத்தம் கொடுப்பது ஏன்?

நமது ஜனாதிபதி ஜீ.ஆர். அமெரிக்காவுக்கு எங்களது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துச் சொல்லி விட்டோம் என்று சொல்லி இருக்கின்றார்.

ஆனால் ஜேவிபி தலைவர் அணுரகுமார திசாநாயக்க இரகசிய பேச்சுக்களை மக்களுக்கு அம்பலப்படுத்துங்கள் என்று கூறுகின்றார்.

இதற்கிடையில் சீனாவைத் தண்டிப்பதற்காக தைவானை அமெரிக்கா பாவிக்க முனைகின்றது. இது பெரிய அழிவில்தான் போய் முடியும் என்று சீனா அமெரிக்காவை எச்சரித்திருக்கின்றது.

தைவான் என்பது மவோ சேதுங் சீனாவைக் கைப்பறிய போது அதிர்ப்தியாளர்கள் பக்கத்தில் இருந்த தைவான் தீவுக்கு தப்பிச் சென்று அவர்கள் உருவாக்கிக் கொண்ட நாடுதான் இது.

தைவானை சீனா தங்கள் நிலப் பிரதேசம் என்று சொல்லிக் கொள்கின்றது. இதானால் ஐ.நா. கூட தைவானுக்கு அங்கிகாரம் கொடுக்காத ஒரு நிலை காணப்படுகின்றது.

தைவானுக்கு நீங்கள் நவீன விமானங்களைக் கொடுத்தால் நீங்கள் போரில்தான் எங்களைச் சந்திக்க முடியும் என்று சீனா அமெரிக்காவுக்கு கடைசி எச்சரிக்கை கொடுத்து இருக்கின்றது.

சீனா இல்லாமல் இலங்கை இதன் பின்னர் நகர முடியாது என்ற நிலை இருக்கின்றது. ஹம்பாந்தோடை துறைமுகம் மற்றும் கொழும்பு போர்ட் சிடி ஊடாக சீனா தனது கால்களை நன்றாக இங்கு பதித்து விட்டது.

பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு கொடி கட்டிப்ப பறக்கின்றது. இதுவரை இந்தியாவால் இதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனது.

எனவே பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை தடுக்கின்ற இறுதிக் கட்ட முயற்சியில்தான் ட்ரம்ப் நிருவாகம் தற்போது இறங்கி இருக்கின்றது.

இது காலம் கடந்த ஒரு நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம். அத்துடன் இது ஒரு தேர்தல் உத்தி என்பது எமது நிலைப்பாடு. இப்போது நீயா நானா பார்த்து விடுவோம் என்ற ஒரு நிலைதான் காணப்படுகின்றது.

இந்தியாவுக்குச் சென்ற பொம்பியோ அங்கு சில பாதுகாப்பு உடன் படிக்கைகளில் கையெழுத்தப் போட்டிருக்கின்றார் அதன் படி பரஸ்பரம் இராணுவ ஒத்துழைப்பு தொழிநுட்ப பரிமாற்றங்கள் அதில் அடங்கி இருக்கின்றன.

போர் போன்ற ஒரு நிலை வந்தால் இலக்குகளைத் துல்லியமாக குறிவைக்கின்ற விவகாரங்களில் இந்தியாவுக்கு அமெரிக்க ஒத்துழைப்பு வழங்க இருக்கின்றது.

அதே நேரம் சீனா ஏற்கெனவே இந்தியாவை வளைத்து விட்டது பாகிஸ்தான் மற்றும் பர்மா இலங்கை ஆகிய நாடுகளில் துறைமுகங்கள் மூலம் தனது கடல் வல்லமையை அது உறுதி செய்து கொண்டுள்ளது.

தரைவழியாகவும் பகிஸ்தான் பர்மா துறைமுகங்களை அது தன்னுடன் நவீன நெடுஞ்சாலைகளால் இணைக்கின்றது.

ஆபிரிக்காவில் பெரும்பாலான நாடுகளை தனக்கு சாதகமாக சீனா வைத்திருக்கின்றது. அந்த நாடுகளின் பெருளாதார மேன்பாட்டுடன் தனது பொருளாதார வல்லமையை அது உறுதிப்படுத்திக் கொள்ளும் வேலையை ஏற்கெனவே அது துங்கி விட்டது.

சீனாவின் செயல்பாடுகளுடன் அமெரிக்காவாலேயே தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் இந்தியா என்னதான் செய்ய முடியும்.

ஆனால் இந்தியா அமெரிக்க உறவுகளால் சீனாவுக்கு எதிராக ஒரு அழுத்தத்தைக் கொடுக்க முடியும் என்பதில் ஒரு யதார்த்த நிலையும் இருக்கத்தான் செய்கின்றது.

இந்த விவகாரம் தொடர்பாக 20க்கு தமது கடும் எதிர்ப்பை காட்டிய பௌத்த குருமார் அமெரிக்காவின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கின்றார்கள்.

இது வரை நமது நாட்டுக்கு வெளிநாட்டு விருந்தாளிகளும் முக்கியஸ்தர்களும் நிறையவே வந்து போய் இருக்கின்றார்கள்.

ஆனால் எம்மை எச்சரித்து அச்சமூட்டிவிட்டு இங்கு வருகின்ற முதல் ராஜதந்திரி மைக் பொம்பியோதான் என்று ஆனந்த முறுத்தெட்டுவே தேரர் மற்றும் எல்லே குனசங்ச தேரர்கள் தனது ஆதங்கத்தை வெளியிடுகின்றார்.

அதே நேரம் நாம் அணிசேர கொள்கையைப் பின்பற்றுபவர்கள் அதனால் இங்கு யாரும் வராலாம் போகலாம் அப்படித்தான் பம்பியே விஜயமும் அமைக்கின்றது என்று நாமல் ராஜபக்ஸ குறிப்பிடுகின்றார்.

தற்போது சீனாவுக்கு எதிராக அமெரிக்கா பிரித்தானியாவை தன்பக்கம் ஈத்துக் கொண்டு காரியத்தில் இறங்கி இருக்கின்றது.

அவர்களின் இந்த கூட்டுக்குள் இந்தியாவை முழுதாக வலைத்துப் போட்டுக் கொள்ள முடியுமாக இருந்தால் அது அமெரிக்காவுக்குப் பெரு வெற்றியாக அமையும்.

இதிலுள்ள வேடிக்கை என்ன வென்றால் பொம்பியே இந்த விஜயங்களை எல்லாம் நிறைவு செய்து கொண்டு அமெரிக்காவில் போய் இறங்குகின்ற நேரம் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியில் இருப்பாரா என்ற சந்தேகம் நிலவுகின்றது.

சீனாவுக்கு எதிரான அமெரிக்க மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டுத்தான் ட்ரம்ப் இந்தத் தேர்தலில் வெற்றி பெற முனைகின்றார்.

தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் சீனாவுடன் மென்போக்கையே கடைப் பிடிப்பார் என்பது எமது கருத்து. ஆனால் அமெரிக்காவில் நடந்த கருத்துக் கணிப்பில் ஜோ பைடன் ட்ரம்ப்பை விட மிகவும் முன்னிலையில் இருக்கின்றார் என்று தெரிகின்றது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஓபாமா தனது முன்னாள் சகா ஜோ பைடனுக்காக களத்தில் வரிஞ்சி கட்டிக் கொண்டு நிற்க்கின்றார்.

தேர்தல் செலவுகளுக்கான நிதி சேகரிப்பின் போது ஜனநாயக் கட்சி வேட்பாளர் ஜோபைடன் 809 பில்லியன் அமெரிக்க டெலர்களையும் குடியரசுக்கட்சி வேட்பாளர் ட்ரம்ப் 552 பில்லியன் டொலர்களையும் வசூலாகத் திரட்டி இருக்கின்றார்கள்.

அமெரிக்க தேர்தலில் அதிக நிதியைத் திரட்டுவதும் அங்கு ஒரு போட்டி நிலையில் இருக்கின்றது. அதில் ட்ரம்ப் பின்னடைந்து விட்டார். கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது இருவரினதும் மொத்த வசூல் இது இருமடங்காக இருக்கின்றது.

இலங்கையுடனான பொம்பியோவின் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறாவில்லை என்றால் இலங்கையிலுள்ள தமிழ் தரப்புக்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இலங்கையை இந்தியாவுடன் இணைந்து பணிய வைக்கின்ற ஒரு திட்டமும் அமெரிக்காவிடம் இருக்கலாம் என்று நாம் யோசிக்கின்றோம்.

தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடைia பிரித்தானியா நீக்கிக் கொள்ள வேண்டும் என தீர்ப்பாயம் ஒன்று தீர்ப்பளித்திருக்கின்றது.

அமெரிக்காவும் அதே பணியில் நடக்க இடமிருக்கின்றது. ஆனால் ட்ரம்ப் இன்னும் எத்தனை மணித்தியாலங்களுக்குத்தான் அதிகாரத்தில் இருக்கப் போகின்றார் என்ற ஒரு நிலையில் தான் ட்ரம்புக்காக பொம்பியோ ஓடித்திரிக்கின்றார். எனவே இது கடைசி ஓட்டமாகவும் அமையவும் இடமிருக்கின்றது.

அமெரிக்க – பிரித்தானிய – யப்பான் – இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இன்னும் பெருந் தொகையாக நாடுகளை உள்ளடக்கிய ஒரு வியூகத்தை சீனாவுக்கு எதிராக வடிவமைக்கத்தான் அமெரிக்க முனைகின்றது.

அப்படிச் செய்து தென் கிழக்காசியாவில் அமெரிக்கா சீனாவை முடக்கப் பார்க்கின்றது. ஆனால் ட்ரம்ப் நிருவாகம் தனது கடைசிய சில மணி நேரத்தில் இந்த பொம்பியோவை ஓடித் திரிய வைத்திருப்பது மிகவும் விநோதமாக இருக்கின்றது.

நமது பார்வையில் இது முற்றிலும் டரம்பின் தேர்தல் பரப்புரை என்றுதான் நாம் அடித்துச் சொல்கின்ற ஒரே கருத்து.

ஆனால் ட்ரம்ப், பொம்பியோ ஆகியோரது இந்த செயல்பாடுகள் முற்றிலும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க மக்களின் உணர்வுகளைத் தூண்டி தேர்தலில் வெற்றி பெருகின்ற கடைசி நேர தேர்தல் உத்திதான் இது.

சீனா என்னதான் மிகப் பெரிய பெருளாதார இராணுவ வல்லமையைப் பொற்றுக் கொண்டாலும் ஆங்கில மொழியும் அமெரிக்காவின் திறந்த கலாச்சாரம் அவர்களுக்கு சர்வதேச அளவில் முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது.

இதனால்தான் சீனா மொழியை சர்வதேச மயப்படுத்துக்கின்ற வேலையில் சீனா தற்போது ஆர்வம் காட்டி வருகின்றது.

பல நூற்றாண்டுகள் போனாலும் அமெரிக்காவின் இந்த திறந்த கலாச்சாரத்தை சீனா எப்படி வெற்றி கொள்ளப் போகின்றது என்பது எமக்குப் புரியவில்லை.

Share.
Leave A Reply