திருகோணமலை ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதில் 16 வயதான என்.விதுஷிகா எனும் யுவதி உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய மூவரும் திருமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

 

இன்று காலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாயார்(வயது 31) மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிலும் அவரது 12, 08 வயது மகள்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடும் ஒரு குடும்பத்தினரே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அறியவருகிறது.

இதேவேளை தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உப்புவௌி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply