கொவிட்-19 காரணமாக இறந்தவர்களை தகனம் செய்ய அரசாங்கம் பணம் செலவழிக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று பாராளுமன்றில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வறிவித்தலை வெளியிட்டார்.

பெரும்பாலான கொவிட்-19 இறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் நிகழ்வதையும் அவர்களது தகனத்துக்கு கட்டணம் அறவிடப்படுவதையும் சுகாதார அமைச்சர் அறிந்திருக்கிறாரா என பாராளுமன்ற உறுப்பினர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர், இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களே இறுதிச் சடங்குக்கு பணம் செலுத்த வேண்டும் என்றார்.

அவ்வாறு பணம் செலுத்த முடியாத குடும்பங்களுக்கு சில நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply