மஹர சிறைக்குள் பாரிய தீ விபத்து ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கும் அதேவேளையில், சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட கலவரம் இன்னமும் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் அப்பகுதியில் வசிப்பவர்களும், தற்போது சிறை வளாகத்திற்கு அருகிலுள்ள பத்திரிகையாளர்களும் பகிர்ந்துள்ளனர்.

மஹர சிறைச்சாலையில் அமைதியின்மையைக் கட்டுப்படுத்த விஷேட அதிரடிப்படை இன்று மாலை அனுப்பப்பட்டது. இருப்பினும், அதிரடிப்படை இன்னும் சிறைக்கு உள்ளே அனுப்பப்படவில்லை. சிறைச்சாலை வளாகத்தை சுற்றி வளைத்துள்ளனர் என நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

குழப்பத்தை கட்டுக்குள் கொண்டுவர சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஒரு கைதி இறந்துள்ளதுடன் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

அதிகாரிகளிடையே உயிரிழப்புகள் உள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. குழப்ப நிலை தொடர்வதாக உத்தியோகபூர்வ வட்டாரங்களிலிருந்து தகவல்களைப் பெற முடியவில்லை.

Share.
Leave A Reply