விமானத்தில் பெண் பயணி ஒருவர் தனது இருக்கைக்கு முன்பக்கம் இருந்த பெண் ஒருவரின் தலை முடியில் சீவிங் கம் (chewing gum) ஒன்றை ஒட்டி வைக்கும் வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

இதனால் எரிச்சலடைந்த பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி, சில வினாடிகளுக்கு பிறகு அந்த தலைமுடி மீது சீவிங் கம் கொண்டு ஒட்டி வைத்துள்ளார்.

அப்போது விமானத்தில் இருந்த பெண் உதவியாளர் ஒருவர் இதனைக் கண்டும் கண்டு கொள்ளாதது போல கடந்து சென்றார்.

தனது தலை முடியில் இப்படி நடைபெறுவதை அறியாத அந்த பெண், அவ்வப்போது தனது தலை முடியை சரி செய்து கொண்டிருந்தார்.

சில வினாடிகளுக்கு பின், தனக்கு இருக்கையில் இருந்து அவர் எழுந்து சென்ற போது கூட தனது தலை முடிக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அவர் அறியவில்லை என தெரிகிறது.

இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பல மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டுள்ள நிலையில், பலர் இது செட் செய்யப்பட்டு வேண்டுமென்றே எடுக்கப்பட்ட காட்சி என்றும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சிலர், நமது தலை முடிக்கு என்ன நடக்கும் என்பது கூடவா தெரியாமல் இருக்கும் என்றும், மேலும் சிலர் அவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கலாம் என்றும், பொழுது போக்குக்காக இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply