பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இருவர் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் விநியோகத்தில் நேற்று(புதன்கிழமை) ஈடுபட்ட இருவரை வழிமறித்த நெல்லியடி பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், அனுமதிப்பத்திரத்தை காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.

அதன்போது அவர்கள் இருவரும் பொதுச் சுகாதார பரிசோதருடன் முரண்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகரால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாடு தொடர்பில் குடிதண்ணீர் விநியோகத்தில் ஈடுபட்ட இருவரையும் விசாரணைக்கு அழைத்த பொலிஸார், அவர்களைக் கைது செய்துள்ளனர்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் இருவரும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Share.
Leave A Reply