தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சித்ரா பணப்பிரச்சினையால் தவித்ததாக நடிகை சரண்யா துராடி தெரிவித்துள்ளார்.

டி.வி. நடிகை சித்ரா தற்கொலை பற்றி நடிகை சரண்யா துராடி அளித்துள்ள பேட்டி வருமாறு: கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் மிகுந்த நட்போடு பழகி வந்தோம்.

தென்ஆப்பிரிக்காவுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றபோதுதான் இருவரும் சந்தித்தோம். அதன் பிறகு எங்களது நட்பு தொடர்ந்தது. என்னிடம் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஒருபோதும் பேசியது இல்லை.

கடந்த ஆண்டு மலேசியாவில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றபோதும் ஒன்றாகவே தங்கினோம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சமீபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை சந்தித்தேன். அப்போதுதான் படப்பிடிப்புக்காக ஓட்டலில் தங்கி இருப்பதாக தெரிவித்தார்.

சரண்யா துராடி

சித்ரா கடைசியாக இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதுதான் கடைசி வீடியோவாக இருக்கும் என்று நினைக்கவில்லை.

தனது திருமணம் பற்றியும், புதிய வீடு குறித்தும் என்னிடம் பேசினார். அவருக்கு பணப்பிரச்சினை இருந்தது.

தனது பிரச்சினை பற்றி யாரிடமாவது சித்ரா பேசி இருக்கலாம். அவரது தற்கொலை முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Share.
Leave A Reply