வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்காக தற்போது நடைமுறையில் உள்ள சில முறைகள் எதிர் வரும் டிசம்பர் 26 ஆம் திகதி முதல் திருத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், நோயாளிகள், குறுகிய கால விசாக்களையுடையவர்கள், அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகளுக்காக, அரசாங்க தனி மைப்படுத்தல் வசதிகளுக்கான விசேடமான மீள ழைத்து வரும் விமானங்களை வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்யும்.
இலங்கையர்கள் அல்லது இலங்கை வம்சாவளியைச் சேர் ந்த வெளிநாட்டவர்கள் இரட்டைக் குடியுரிமையு டையவர்கள் நியமிக்கப்பட்ட ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத் தலுக்குப் பணம் செலுத்துவதற்கு ஏற்ப முன் அனுமதி யின்றி இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
இலங்கைக்கு எந்தவொரு வணிக விமானங்களிலும் மீள ழைத்து வராத விமானங்களிலும் வெளிவிவகார செய லாளர் (அல்லது) சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக் குழுவின் அனுமதியின்றி பயணிக்க அனுமதிக்கப்படு வார்கள்.
கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில், சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு விமா னம் ஒன்றில் பயணிக்கும் பயணிகள் குறித்து வரம்பைத் தீர்மானிக்கும்.
இந்த விதிகளின் கீழ் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்ட பயணிகள் பணம் செலுத்தி தனிமைப் படுத்தலுக்குட்படுத்தப்படுவதை உறுதி செய்வது விமான நிறுவனத்தின் முழுப் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.