திருக்கோவில் பிரதேசத்தில் இலட்சக்கணக்கான கலப்பு மீன்கள் கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இறந்த நிலையில் இலட்சக் கணக்கான கலப்பு மீன்கள் கடற்கரையில் கரையொதுங்கி இருப்பதை இன்று புதன்கிழமை (23.12.2020) அவதானிக்க முடிந்துள்ளது.
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள கடற்கரை பிரதேசத்தில் இவ்வாறு கலப்பு மீன்கள் அதிகளவில் கரையொதுங்கி காணப்படுவதுடன், மீன்கள் அனைத்தும் இறந்து அழுகிய நிலையில் காணப்படுகின்றன.
இவ்வாறு கரையொதுங்கிய மீன்களை நாய் மற்றும் காகங்கள் இரைக்காக தூக்கி செல்வதுடன் அப்பிரதேசமெங்கும் தூர்நாற்றமும் வீதி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்கோவில் பிரதேச செயலாளர் உட்பட்ட பலரும் வருகை தந்தது நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.
மேலும், குறித்த மீன்களை உடனடியாக அகற்றி பிரதேசத்தை சுத்தப்படுத்தும் வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.