நாட்டில் மேலும் 231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) மட்டும் 579 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 639ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 582 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 29 ஆயிரத்து 882 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்னும் எட்டாயிரத்து 573 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இன்று மேலும் ஒரு கோரோனா மரணம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனாவினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 184ஆக உயர்ந்துள்ளது.

Share.
Leave A Reply