இன்னும் சற்று நேரத்தில் விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

மேலும், அமைச்சரவையில் எஞ்சியவர்கள் பதவி விலகுவதா அல்லது பதவியில் நீடிப்பதா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த பதவி விலகல் தொடர்பில் ஊடகப்பிரிவு விளக்கம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகவும், பதவி துறந்துள்ளதாகவும் பல்வேறு சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.

பிரதமர் பதவியை துறப்பது குறித்து இதுவரையில் கவனம் செலுத்தப்படவில்லை எனவும் பிரதமரின் ஊடகப்பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகல் குறித்து பல்வேறு ஊடகங்களில் பலதரப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளமை அவதானத்திற்குரியது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை குறுகிய அமைச்சர்களை உள்ளடக்கிய வகையில் வெகுவிரைவில் ஸ்தாபிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக நம்பதகுந்த தரப்பினர் அனுமானித்துள்ளனர்.

மேலும், இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முன்மொழிவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் சாதகமான பதிலை வழங்கியதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று இரவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply