இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என்று அந்நாட்டு நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

“பொறுப்புள்ள ஓர் அரசாக, அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ எந்த சூழ்நிலையிலும் பதவி விலக மாட்டார்”, என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தற்போதைய பொருளாதார நெருக்கடி சூழ்நிலையை எதிர்கொள்வார் என்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சில நாள்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை, திரும்பப் பெறுவதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார்.

Share.
Leave A Reply