ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தன் குடும்பத்தினர் குறித்து பொதுவெளியில் அடையாளப்படுத்தாமல் எப்போதும் பாதுகாத்தே வந்துள்ளார்.

தன்னுடைய மகள்களின் பெயர்களைக்கூட அவர் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை.

ஆனால், புதினுடைய 35 வயதான கேத்தரீனா டிகோனோவா மற்றும் 36 வயதான மரியா வொரோன்ட்ஸோவா இருவரின் பெயர்களும், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட தடைகளில் இடம்பெற்றுள்ளன.

அவர்கள் இருவரும் புதின் மற்றும் அவருடைய முன்னாள் மனைவி லியூட்மிலாவின் மகள்கள் ஆவர்.

அவருடைய மூத்த மகள் மரியா வொரோன்ட்ஸோவா 1985ஆம் ஆண்டு பிறந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் உயிரியல் படிப்பும், மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மருத்துவமும் பயின்றார்.

தற்போது அவர் கல்வியாளராக உள்ளார், நாளமில்லா சுரப்பிகள் பிரிவில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். அவர் தொழிலதிபராகவும் உள்ளார்.

பெரிய மருத்துவ மையம் ஒன்றின் கட்டுமானத்திற்கு திட்டமிட்டுள்ள நிறுவனம் ஒன்றின் இணை உரிமையாளராகவும் அவர் உள்ளதை பிபிசி ரஷ்யா கண்டறிந்துள்ளது.

அவருடைய தங்கை கேத்தரீனா டிகோனோவா பொதுவெளியில் நன்கு அறியப்பட்டவராக உள்ளார்.

அவர் ‘ராக் அண்ட் ரோல்’ நடனக்கலைஞர். 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச நிகழ்ச்சி ஒன்றில் கேத்தரீனாவும் அவருடைய இணையும் 5ஆவது இடத்தைப் பிடித்தனர்.

அவர் தற்போது கல்வித்துறையிலும் தொழிலதிபராகவும் உள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டில் நியூரோ தொழில்நுட்பம் குறித்து ரஷ்ய அரசு ஊடகத்தில் பேசியுள்ளார். மேலும், 2021 ஆம் ஆண்டில் தொழில் நிகழ்ச்சி ஒன்றிலும் உரையாற்றியுள்ளார்.

Putin has repeatedly dodged questions to confirm or deny the reports about his familial relations to Vorontsova and Tikhonova. pugachevsergei.com

Share.
Leave A Reply