பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்-ஆலியா பட் திருமணம் கடந்த 14-ம் தேதி வெகுவிமரிசையாக நடந்தது.

இத்திருமணத்தில் இரு குடும்பத்திற்கும் மிகவும் வேண்டப்பட்டவர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.

அதோடு புதிதாக திருமண வரவேற்பு எதுவும் நடத்தப்படாது என்று ரன்பீர் கபூர் தாயார் நீது கபூர் தெரிவித்திருந்தார்.

ஆனால் நேற்று இரவு திருமண ஜோடிக்கு திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுவும் திருமணம் நடந்த பாந்த்ரா பாலிஹில் வாஸ்து இல்லத்தின் மாடியில்தான் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக மாடி பகுதி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிக்கு வருபவர்கள் யாரும் பரிசுப்பொருட்களை கொண்டு வரவேண்டாம் என்று கபூர் குடும்பத்தினர் தெரிவித்துவிட்டனர்.

ஆனால் இயக்குனர் கரண் ஜோகர் மட்டும் சேம்பெயின் பாட்டில் கொண்டு வந்திருந்தார்.


கையில் ஆலியா பெயரை மருதானி வைத்துக்கொண்ட ரன்பீர்

கரண் ஜோகர் உட்பட முக்கிய பிரபலங்கள் கருப்பு ஆடையில் வந்திருந்தனர். இதே போன்று தயாரிப்பாளர் ஆதித்யாவும் தனது மனைவி அனுஷ்கா ரஞ்சனுடன் கருப்பு ஆடையில் வந்திருந்தார்.

நடிகை கரிஷ்மா கபூரும் கூட கருப்பு கலரிலேயே வந்திருந்தார். இது தவிர ரன்பீர் கபூர் நண்பர் ஆதித்ய ராய் கபூர், அயன் முகர்ஜி, ரித்திமா சஹ்னி, ஆலியாவின் தாயார் சோனி ராஸ்தான் ஆகியோரும் வந்திருந்தனர் உட்பட பாலிவுட் பிரபலங்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

கரிஷ்மா கபூர்

நடிகர் அர்ஜூன் கபூர் தனது காதலி மலைகா அரோராவுடன் சேர்ந்தே வந்தார். அர்ஜூனும் கருப்பு ஆடையில் தான் வந்திருந்தார்.

நடிகர் ஷாருக்கான் மனைவி கவுரி கான் தனியாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இதனால் ஷாருக்கான் வரமாட்டோரோ என்று அனைவரும் நினைத்தனர்.

ஆனால் சிறிது நேரத்தில் அவர் வேறு ஒரு காரில் தனது வழக்கமான பாணியில் வந்து இறங்கினார்.

ரோஹித் தவான் தனது மனைவி ஜான்வியுடன் கலந்து கொண்டார். ஸ்வேதா பச்சன், ஆலியாவின் தோழி அகான்ஷா ரஞ்சன், ரன்பீர் கபூர் உறவினர் அர்மான் ஜெயினும் தனது மனைவியுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். திருமண வரவேற்பு அதிகாலை வரை நடந்தது.

மருமகனுக்கு ரூ.2.50 கோடி மதிப்பு வாட்ச்!

நடிகர் ரன்பீர் கபூருக்கு ஆலியா பட்டின் தாயார் சோனி ராஸ்தான் ரூ.2.50 மதிப்புள்ள வாட்ச் பரிசாக வழங்கினார்.

திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் காஷ்மீர் சால்களை வழங்கப்பட்டது. இதனை ஆலியா பட் தான் தேர்வு செய்திருந்தார்.

ஆலியாவிற்கு ரன்பீர் கபூர் மிகவும் விலை மதிப்பு மிக்க வைர மோதிரம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

Share.
Leave A Reply