மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் – பாலத்தடிச்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் (59) வயதுடைய தந்தையை பொல்லொன்றில் தாக்கி (31) வயதுடைய மகன் கொலை செய்த சம்பவமொன்று நேற்றிரவு (17) பதிவாகியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 

தந்தை வீட்டிலுள்ள கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது மதுபோதையில் வந்த  மகன் தந்தையை பொல்லினால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மகனை சந்தேகத்தின் பேரில் மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளதோடு சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீம் பௌஸான் இன்று திங்கட்கிழமை (18) காலை விஜயம் செய்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு  சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் தந்தையை கொலை செய்த (31) வயதுடைய மகன் மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை  மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply