மந்திரவாதிகள் தங்கள் உயிரை உடலிலிருந்து பிரித்து, பின்னர், தங்கள் வசதிக்கு ஏற்ப மீண்டும் உடலில் சேர்ப்பதை நாம் திரைப்படங்கள் அல்லது சீரியல்களில் பார்த்துள்ளோம்.

தற்போது சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு பெண் தரையில் படுத்து, தன் உயிரை, ஆன்மாவை, உடலில் இருந்து பிரிப்பதை காண முடிகின்றது.

வீடியோ உணர்ச்சிகளை தூண்டும் வகையில் இருக்கலாம். ஆனால், இந்த வீடியோ வெளிவந்ததிலிருந்து சமூக வலைதள வாசிகள், இது குறித்து பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

சமூகவலைத்தளங்களில் தலைப்புச் செய்தியாகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் தரையில் படுத்துள்ளதை காண முடிகின்றது.

அவர் கண்களை பெரிதாக விரித்து பார்க்கிறார். பின்னர் அவர் உயிர் உடலில் இருந்து ஆன்மா பிரிவது போன்ற காட்சி தெரிகிறது.

ஆன்மா (உயிர்) வெளிவந்தவுடன் பயங்கரமாக சிரிப்பதையும் காண முடிகின்றது. இப்போது வைரலாகியுள்ள இந்த வீடியோவை நாங்கள் உறுதிப்படுத்தவில்லை.

ஏனென்றால் வீடியோவைப் பார்த்தால்அது கிராபிக்சை பயன்படுத்தி இதைச் செய்திருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த வீடியோவை பார்த்த உடனே அனைவரும் அதிர்ந்து தான் போவார்கள். எனினும், மீண்டும் மீண்டும் பார்த்த பிறகு தான் இதில் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடியும். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பிரபல மீம் பேஜ் ‘காண்டா’ (ghantaa)வில் பகிரப்பட்டு உள்ளது.

இதற்கு பல கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. ‘உயிர் இப்படி பிரிவதில்லை’ என ஒருவர் எழுதியுள்ளார். இந்த வீடியோ இதுவரை 14 லட்சம் பார்வையாளர்களையும் ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பெற்றுள்ளது.

தெளிவாகத் திருத்தப்பட்டு நகைச்சுவை நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த வீடியோ, பின்னணி இசையைக் கொண்டுள்ளது.

( நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள்..! நீங்கள் தைரியமாக இருந்தால், உங்கள் சொந்த பொறுப்பில் வீடியோவைப் பாருங்கள். )

Share.
Leave A Reply