• கனடாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டுள்ள தடையைநீக்குவேன் என்பது முதல் வாக்குறுதி.
• கனடாவில் குடியேறவிரும்பும் தமிழ் குடும்பங்களுக்காக குடியேற்ற கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு அவர்களுக்கானகதவுகள் திறந்துவிடப்படும் என்பது இரண்டாவதுவாக்குறுதி.
கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தினர் மத்தியில், வாட்ஸ் அப்பில் மூன்று நிமிடகாணொளி ஒன்றுபகிரப்பட்டுவருவதாக, டொரண் டோஸ்டார் ஒருசெய்தியைவெளியிட்டது.
பிராம்ப்டன் நகரமேயராக (Brampton mayor) உள்ளபட்றிக் பிறவுணின், பேச்சு அடங்கியகாணொளியே அதுவாகும்.
2006 தொடக்கம் கனேடியபாராளுமன்ற உறுப்பினராக இருந்தபட்றிக் பிறவுண், பின்னர்,ஒன்ராறியோ கொன்சர்வேட்டிவ்கட்சியின் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
அவர் தற்போது கனேடிய கொன்சர்வேட்டிவ் கட்சியின்தலைமைப் பதவிக்குப்போட்டியிடும் முக்கியமானவேட்பாளர்களில் ஒருவர்.
ஒட்டாவாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தன்னை ‘விடுதலைப்புலி’என்று முத்திரை குத்தியிருப்பதாக அவர் வெளிப்படையாக கூறுகிறார்.
பிராம்ப்டன் நகரசபையில் மாவீரர்நாள் நினைவேந்தலுக்கும், முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கும் இவர் காரணமாக இருந்தவர்.
கொன்சர்வேட்டிவ் கட்சித்தலைவர்பதவிக்கான தேர்தல் செப்டெம்பர் 20ஆம்திகதிநடக்கவுள்ள நிலையில், அதனைக் கைப்பற்றுவதற்கு தமிழ்ச்சமூகத்தின் ஆதரவுகோரி அவர் அந்தகாணொளியைவெளியிட்டிருக்கிறார்.
எனினும், அது பற்றிக் பிறவுணின் பிரசாரவலைத் தளங்களில் அதிகாரபூர்வமாக இடம்பெறவில்லை.
அதற்காகஅவர், தமிழ்சமூகத்தின் முன்பாக நடிக்கிறார், போலி வாக்குறுதிகளை கொடுக்கிறார் என்றுஅர்த்தமில்லை.
ஏனென்றால், அவர் தமிழ்ச்சமூகத்தின்பக்கம் நிற்பவர், தமிழ்ச்சமூகத்தின் நீதிகோரும் போராட்டங்களின் பின்னால் அவர்தொடர்ச்சியாக இருந்துவந்திருக்கிறார்.
இவரதுவீடியோஉரையில், முக்கியமானசிலவிடயங்கள் – அல்லது வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கின்றன.
கொன்சர்வேட்டிவ்கட்சித் தலைவர் பதவியைக்கைப்பற்றி, ஆட்சியைப் பிடித்தால், பிரதமரானதும், கனடாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டுள்ள தடையைநீக்குவேன் என்பது முதல் வாக்குறுதி.
கனடாவில் குடியேறவிரும்பும் தமிழ் குடும்பங்களுக்காக குடியேற்ற கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு அவர்களுக்கானகதவுகள் திறந்துவிடப்படும் என்பது இரண்டாவதுவாக்குறுதி.
தமிழ்ச் சமூகத்துக்கா ககனடா செய்யத் தவறியவிடயங்களுக்காக, கனேடியப் பிரதமர் என்றவகையில் மன்னிப்புக்கோருவேன் என்றும், அந்த தவறை சரிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்பது மூன்றாவதுவாக்குறுதி.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை 2006ஆம் ஆண்டு ஏப்ரல்மாதம், ஸ்டீபன் ஹாப்பரின் கொன்சர்வேட்டிவ் அரசாங்கம்தான்தடைசெய்தது.
அப்போது பற்றிக்பிறவுண் அந்த அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இடம்பெற்றிருந்தார்.
பின்னர்,2018இல்அந்ததடை, ஜஸ்டின்ட் ரூடோவின் தலைமையிலானலிபரல்கட்சி அரசாங்கத்தினால் மீளாய்வுசெய்யப்பட்டு உறுதிசெய்யப்பட்டது.
தடைசெய்தவர்கள்தான், தடையை நீக்கவேண்டும் என்றும், போர் முடிந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்ததடைநீடிக்கவேண்டியதில்லைஎன்றும்,பற்றிக்பிறவுண்குறிப்பிட்டுள்ளார்.
இந்ததடையினால், பலகுடும்பங்கள், களங்கத்துக்குள்ளாகியிருப்பதாகவும், பலர்தங்களின் குடும்பங்களுடன் இணைந்து கொள்ளமுடியாதிருப்பதாகவும், சுட்டிக் காட்டியிருக்கிறார் பற்றிக்பிறவுண்.
“என்னை விடுதலைப் புலி என்று இலங்கை தூதரகம் மக்களிடம் கூறுகிறது. எனவே நான் தடையை நீக்கப் போகிறேன். தடையை இரத்து செய்யப் போகிறேன். நான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்.
இனப்படுகொலை செய்யும் அரசாங்கத்திற்கு எதிராக அன்புக்குரியவர்களை பாதுகாப்பவர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
புலிஎன்பது, பயங்கரவாதத்தின் சின்னமாக இருப்பதை விட, புலி என்பது போர்க்குற்றம் இழைக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தற்காப்புக்கான சின்னம் என்பதே எனது கருத்து.” என்றுஅவர்குறிப்பிட்டிருக்கிறார்.
விடுதலைப் புலிகளுக்கான மிகப்பெரிய ஆதரவுத்தளத்தைக்கொண்டிருந்தநாடுகனடா. அங்கு புலிகள்மீதான தடையைநீக்குவேன் என்றவாக்குறுதியுடன் கொன்சர்வேட்டிவ்கட்சி தலைமைக்காக போட்டியில் பற்றிக்பிறவுண்இறங்கியிருப்பது முக்கியமானவிடயம்.
அவர் கனடாவுக்குள் வரவிரும்பும்தமிழ் குடும்பங்களைஇரண்டுகரங்களையும்நீட்டி வரவேற்பேன்என்று கூறியிருக்கிறார்.
உக்ரைன் மீதானரஷ்யாவின் போரில்கனடா அதீதமானபங்களிப்பைசெய்துவருகிறது.
உக்ரைனுக்குகனடா ஆயுதங்களை வழங்குகிறது. நிதியுதவிகளையும் வழங்குகிறது. அண்மையில் 500மில்லியன் டொலர்கள் நிதியை உக்ரேனுக்காக ஒதுக்கியிருக்கிறது.
அத்துடன், உக்ரேனில் இருந்துவரும் அகதிகளுக்காக கனடாதனதுகதவுகளை அகலத்திறந்து வைத்திருக்கிறது. பெரிதாக எந்தஆவணங்களும் இல்லாமல், உக்ரைன் அகதிகள் கனடாவை வந்தடையமுடிகிறது.
உக்ரேன்விவகாரத்தில், கனடா இந்தளவுக்கு ஆர்வம்காட்டுவதற்கு பலகாரணங்கள்உள்ளன. பூகோள, அரசியல், பாதுகாப்புகாரணங்கள், தவிர கனடாவில் 9 இலட்சம் உக்ரேனியர்கள் இருப்பதும் ஒருமுக்கியமான காரணம்.
தற்போது உக்ரேனியர்களுக்கும், 1979-80இல் வியட்நாமின் படகு அகதிகளுக்கும் கனடா தனதுகுடியேற்ற கட்டுப்பாடுகளைதளர்த்தி, கதவுகளைதிறந்துவிட்டது போன்று, இலங்கைத் தமிழர்களுக்காக திறந்துவிடவில்லை.
அதற்கு விடுதலைப்புலிகள் மீதுவிதிக்கப்பட்டதடையும், தமிழர்கள்மீது குத்தப்பட்டபயங்கரவாதஅடையாளமும்முக்கியமானகாரணம்.
இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றமீறல்கள், இனப்படுகொலைகள் விடயத்தில் கனடாபொறுப்புக்கூறலுக்கான சில அழுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பினும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அதுஇடம்பெற்றிருக்கவில்லை.
உக்ரேனில்இருந்துஅகதிகளாகவருபவர்களிடம் இப்போதுகனடியபொலிசார், போர்க்குற்றஆதாரங்களைசேகரித்துஆவணப்படுத்துகிறார்கள்.
அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கைஎடுத்துவருகின்றனர்.
ஆனால், இலங்கையில் நடந்தபோர்க் குற்றங்களை ஆவணப்படுத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு கனடாநடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
இந்தமனக்குறை புலம்பெயர் தமிழர்கள்மத்தியில் இருக்கிறது.இவ்வாறானநிலையில்தான், தமிழர்கள்விடயத்தில் கனடாபோதுமானளவுக்கு செயற்படாதமைக்காக பிரதமர் என்றவகையில் மன்னிப்புக் கோருவேன்,
அதனை சரிக்கட்டத் தேவையான நடவடிக்கைகளைமுன்னெடுப்பேன் என்றுபற்றிக்பிறவுண்கூறியிருக்கிறார்.
அவரது இந்த காணொளி பகிரப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் கனேடியப்படைகளின்மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றியவர்கள், கனேடிய அரசாங்கத்தை கடுமையாகசாடியிருக்கிறார்கள்.
ஆப்கானிஸ் தானில்தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததும் அவர்கள் அவசரஅவசரமாக கனடாவில் குடியமரஅனுமதிக்கப்பட்டனர்.
அவர்களின்குடும்பங்களையும்,கனடாவுக்குஅழைக்கநடவடிக்கைஎடுக்கப்படும்என்று,உறுதிஅளிக்கப்பட்டது.
ஆனால், தங்களிடம்கோரப்படும் 15 வரையான ஆவணங்களை தலிபான் அரசநிர்வாகத்துக்குள் இருந்து திரட்டமுடியாதிருப்பதாகவும், தங்களின் குடும்பங்களை ஒன்றிணைக்க முடியாதிருப்பதாகவும்அவர்கள்குறைபட்டிருக்கிறார்கள்.
பெரியதாக எந்தஆவணமும் இல்லாமல், உக்ரைனியஅகதிகள், கனடாவில் குடியமரஅனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால் தங்களை கனேடியஅரசாங்கம் ஏமாற்றிவிட்டதாக அவர்கள்குறைபட்டுக்கொள்கிறார்கள்.
இதேநிலையில் தான், புலம்பெயர்தமிழர்களும்இருக்கிறார்கள்.
இந்தநிலையை மாற்றுவதாக பற்றிக்பிறவுணின்வீடியோஉறுதியளிக்கிறது. அந்தவாக்குறுதியை அவர்நிறைவேற்றுவதற்கு,அவர்முதலில் கொன்சர்வேட்டிவ்கட்சியின்தலைவராக வெற்றிபெற வேண்டும்.
அதன்பின்னர், கனேடிய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக்கைப்பற்றவேண்டும்.
-சுபத்திரா-