நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

நாட்டில் இன்று காலை முதல் காலிமுகத்திடல் மற்றும் அலரிமாலிகை உள்ளிட்ட பல பகுதிகளில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில், நிட்டம்புவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் போட்டத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply