ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தப்படலாம் என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளதாக, செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்டம் நடத்தும் பொதுமக்கள் வன்முறைக்கும், ராணுவ ஆட்சிக்கும் இடமளிக்காத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், “நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக அமைதியான முறையில் போராட்டத்தை நடத்திவரும் அனைத்து குடிமக்களுக்கும் நான் எச்சரிக்கையொன்றை விடுக்கின்றேன்.

ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply