நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையின் வரலாற்றில் இது ஒருபோதும் நிகழ்ந்ததில்லை
ஆர்ப்பாட்டக்காரர்களின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடியும்-
ஆகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம் உள்ளது-
1
கேள்வி: பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள் -நீங்கள்முற்றிலும் வித்தியாசமான சூழ்நிலையில் பிரதமராக பதவி ஏற்பதற்கு விரும்பியிரூப்பீர்கள் என நான் நிச்சயமாக நம்புகின்றேன்-மிக மோசமான சூழ்நிலைகள் இதற்கு யார் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும்?

பதில்- முன்னைய நிர்வாகம் பொருளாதாரத்தை வீழ்த்தியதால் தற்போதைய நெருக்கடிக்கு அவர்கள் மீதே குற்றம்சுமத்தவேண்டும்.

நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையின் வரலாற்றில் இது ஒருபோதும் நிகழ்ந்ததில்லை.  எங்களிடம் டொலர்கள்இல்லை – ரூபாய்கள் இல்லை

கேள்வி: தற்போதைய ஆட்சியாளர்கள் மீதே குற்றம்சாட்டவேண்டும் என்றால் இதுவரையில் அவர்களிற்கு போதுமான தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?

ஜனாதிபதி இன்னமும் பதவியில் உள்ளாளார்- பிரதமர் பதவி விலகிவிட்டார் ஆனால் அவரது குடும்பத்தினர் இரண்டு தசாப்தங்களாக நாட்டை ஆண்டுள்ளனர் ஜனாதிபதி பதவி விலகவேண்டுமா?

பதில்– கேள்விக்கு இது ஒரு சர்ச்சைக்குரிய விடயம் இந்த விடயத்தில் நாட்டில் இரண்டு கருத்துக்கள் காணப்படுகின்றது

காலிமுகத்திடலில் உள்ளவர்கள் அனைத்து இளைஞர்களும் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என கருதுகின்றனர்.

காலிமுகத்திடலிற்கு வெளியேயும் சில அரசியல் கட்சிகள் மத்தியிலும் இந்த கருத்து காணப்படுகின்றது.

அதேவேளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படவேண்டும் என கருதுகின்றது.அவர்கள் ஜனாதிபதி பதவி விலகுவது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை ஆகவே இரண்டு விதமான கருத்துக்கள் நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

இலங்கை 21வது திருத்தத்தை நிறைவேற்றிய பின்னர் நாடாளுமன்றத்தை மீண்டும் வலுப்படுத்தும் 19வது திருத்தத்தை நாடு மீண்டும் கொண்டுவரவேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருக்கின்றேன். இது பிரதமரின் அதிகாரங்களை வலுப்படுத்தும் நடவடிக்கை.

அதன் பின்னர் அனைத்து கட்சி தலைவர்களும் ஜனாதிபதியும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு எதிர்காலம் குறித்த ஏற்பாடொன்றிற்கு வரவேண்டும்

கேள்வி: நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன-அனேகமாக ஜனாதிபதிக்கு எதிராகவே அவை இடம்பெறுகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன – பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்ணீர் புகை பிரயோகம் இடம்பெறுகின்றது – பொலிஸார் கடுமையாக நடந்துகொள்கின்றனர் – ஆர்ப்பாட்டங்கள் குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன? உங்களால் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகின்றதா?

பதில்– ஆர்ப்பாட்டக்காரர்களின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடியும்- முதியவர்களும் இளையவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இளையவர்கள் தங்கள் எதிர்காலம் பறிபோவதாக கருதுகின்றனர்-நடுத்தரவர்கக்கத்தை சேர்ந்த முதியவர்கள் தங்கள் வாழ்க்கை முறை வீழ்ச்சியடைவதாக கருதுகின்றனர் –

உரமில்லாத விவசாயிகள்

பொலிஸ்நிலையங்களிற்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு வெளியேயும்இவேறு இடங்களிலும் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இது மக்களின் சீற்றம் விரக்தி நம்பிக்கையற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.

மக்கள் தற்போது இதற்குமேலும் சுமையை சுமக்க முடியாத நிலையில் உள்ளனர்
நாங்கள் நிச்சயமாக ஸ்திரமான நிலையில் இல்லை.

நீங்கள் தற்போது காண்பித்துள்ள ஆர்ப்பாட்டம் தீவிரவாத போக்குகொண்ட இளைஞர் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழு வருடத்திற்கு ஐந்து அல்லது ஆறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது வழமை.

நீர்தாரை பிரயோகம் தங்கள் மீது இடம்பெறுவதை உறுதி செய்வதே அவர்களின் நோக்கம்.
ஆனால் அதன் அர்த்தம் இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் இல்லை என்பதல்ல – உள்ளன-
அவைசிறிய ஆர்ப்பாட்டங்கள்

உக்ரைன் யுத்தத்தின் விளைவுகளை இலங்கை அனுபவிக்கின்றதா? குறுகிய காலத்திற்கு நிலைமை மோசமடையுமா?

பதில்- நாங்கள் எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கத்தை உணர்கின்றோம் இது இன்னமும் அதிகரிக்கும் என கருதுகின்றோம்.

விவசாயத்திற்கான போதிய உரம் இல்லை என்பதே எங்களின் முக்கிய கரிசனை எதிர்வரும் பருவகாலத்தில் முழுமையான விளைச்சல் கிடைக்காது.

இதன் காரணமாக ஆகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம் உள்ளது. அக்காலப்பகுதியிலேயே உலக உணவு நெருக்கடி உருவாகும்அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை எப்படி எதிர்கொள்ளப்போகின்றோம் என பார்க்கவேண்டும்

கேள்வி – உங்களின் உதவிக்கு வரக்கூடிய சர்வதேச சகாக்களிற்கான உங்களின் பதில் என்ன?

நாங்கள் எப்படியும் வங்குரோத்து நிலையிலேயே இருந்தோம். கடனை செலுத்துவதற்கான பணம் எங்களிடம் இருக்கவில்லை- நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் நான் அது குறித்து வெட்கமடைகின்றேன்-ஆனால் இதுவே யதார்த்தம் .

நாங்கள் எங்கள் சகாக்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.அதற்கு அவர்கள் சிறந்த முறையில் பதிலளித்துள்ளனர்.

நாங்கள் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும் என்பது உங்களிற்கு தெரியும்.

இந்தியாவே துரிதமாக உதவிகளை வழங்கியது. நாங்கள் அவர்களிடமிருந்து நிதியை பெற்றுக்கொண்டோம். அது நாங்கள் தொடர்ந்து செயற்படும் நிலையை உறுதிசெய்தது, அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு உதவி வழங்கும் சமூகத்தை சேர்ந்த ஏனையவர்களிடமிருந்ருது உதவிகள் கிடைக்கும் என நான் கருதுகின்றேன்.

கேள்வி: தற்போதைய சூழ்நிலையில் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது பாதுகாப்பானது என தெரிவிப்பீர்களா?

கேள்வி – சுற்றுலாத்துறை என்பது உருவாகிவரும் எந்த சந்தையினதும் முக்கியமான விடயம் -நீங்கள் சுற்றுலாப்பயணிகள் வருவதை ஊக்குவிக்கவில்லையா? இது ஒரு உண்மையான கேள்வி?

பதில்: நாங்கள் மக்கள் விஜயம் செய்வதை விரும்பவில்லை என தெரிவிக்க முடியாது. ஆனால் அந்நியசெலாவணி பற்றாக்குறை ஆர்ப்பாட்டம் அத்தியாவசியப்பொருள் தட்டுப்பாடு காரணமாக அவர்கள் இந்த தருணத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள மாட்டார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்.

கேள்வி – எனது இறுதி கேள்வி- நீங்கள் உங்கள் நெருக்கடிகள் குறித்து மிகவும் நேர்மையாக பதிலளித்தீர்கள்.

உங்கள் வெளிப்படைத்தன்மை நம்பிக்கை அளிக்கின்றது நீங்கள் வெற்றிபெறவேண்டும் என வாழ்த்துகின்றோம்- நான் மீண்டும் ஜனாதிபதி அவர்கள் குடும்பம் குறித்த கேள்விக்கு வருகின்றேன் – ஏனென்றால் நீங்கள் ஒரு பேட்டியில் பிபிசிக்கு நான்கு நாட்களிற்கு முன்னர் வழங்கியபேட்டியில் நீங்கள் there is no point looking at the books books are cooked என தெரிவித்திருந்தீர்கள் – அதன் உண்மையான அர்த்தம் என்ன?

ஜனாதிபதி ஊழலில் ஈடுபட்டார் என நீங்கள் வெளிப்படையாக தெரிவிக்கின்றீர்களா- அப்படியென்றால் நிச்சயமாக அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கடும் தண்டனை வழங்கப்படவேண்டும்?

பதில்- பல கூட்டுத்தாபனங்கள் சரியான கணக்கு வழக்குகளை காண்பிக்கவில்லை – திறைசேரி காண்பித்துள்ள கணக்குகள் குறித்தும் கேள்விகள் உள்ளன. 2.6 டிரில்லியன் வருமானம் 1.6 டிரில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது.

திறைசேரிக்குள் உள்ள ஏனைய அமைப்புகளின் கணக்குகளையும் ஆராயவேண்டு. இஒரு தனிநபர் செய்தாரா அல்லது பல நபர்கள் செய்தார்களா? எங்களிற்கு தெரியாது. இது பத்து வருடங்களிற்கு மேல் இடம்பெறுகின்றது என நான் கருதவில்லை இரண்டு வருடகாலமாகவே இது இடம்பெறுகின்றது.

பல கட்டணங்கள் செலுத்தப்படவில்லை.கட்டணங்களை செலுத்த முடியதாத நிலை காணப்படுகின்றது என்பதை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தவில்லை.

இதன் காரணமாகவே நான் அந்த தொடரை பாவித்தேன் நிச்சயமாக அது இடம்பெற்றுள்ளது.

பொருளாதாரம் சிறந்த நிலையில் இல்லாத போது சிறந்த நிலையில் உள்ளதாக காண்பிப்பதற்காக இது இடம்பெற்றுள்ளது

Share.
Leave A Reply