உயர் அழுத்த மின்மார்க்கத்திற்கான திருத்த வேலை காரணமாக புங்குடுதீவு பகுதியில் மின்தடங்கல் ஏற்படலாம் என இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதம பொறியியலாளர் எந்திரி.யே.அமலேந்திரன் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேலணை புங்குடுதீவு – பாலம் புங்குடுதீவு வாழ்மக்களின் மின்சார விநியோகிப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக வேலணை புங்குடுதீவு பாலத்தினுடாக புங்குடுதீவு பிரதேசத்திற்கு கடல்மார்க்கமாக கொண்டு செல்லப்படும் உயர் அழுத்த மற்றும் மின்கம்பங்களினை பராமரிக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது .

இப்பணிகள் கடல் நீர் வற்றும் காலங்களிலேயே மேற்கொள்ள முடியும் என்பதனால் 06.06.2022 தொடக்கம் 31.07.2022 வரையான காலப்பகுதியில் கட்டம் கட்டமாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம் .

( நயினாதீவு திருவிழாக் காலங்களில் இவ்வேலைகள் இடம்பெறமாட்டாது ) எனவே இக்காலப்பகுதியில் இப்பாதையினூடாக பயணிப்போருக்கு சில தடங்கல்கள் / தாமதங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் இவ்விடயத்தை முன்கூட்டியே தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply